சுவீடனில் உள்ள பிரபல லன்ட்(Lund) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு பற்றிய செய்தி இது. பொதுவாக, குளிர் காலங்களில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் அதிகரித்து, ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைத் தான் இந்த ஆய்வுக் குழு இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு நம்மை பீதியடைய வைத்துள்ளது.
அவர்கள் ஆய்வு முடிவின் படி, குளிர் கால விடுமுறைகளில் தான் ஹார்ட் அட்டாக்குகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், குறிப்பாக கிறிஸ்துமஸ் அன்று மாலை, விடுமுறை காலங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும், மற்ற விடுமுறை நாட்களை விட, கிறிஸ்துமஸ் அன்று இரவு 10.00 மணியளவில் 37 சதவிகிதம் அதிகமாக ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதாக அந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a146-300x217.jpg)
இது ஏதோ, இன்று நேற்று நடத்தி வெளியிட்ட ஆய்வு முடிவு ஐல்லை. ஸ்கான்டினேவியன் நாட்டில், கடந்த 16 வருடங்களாக இதற்கான ஆய்வை நடத்தி வந்திருக்கிறது அந்தக் குழு. அங்கே, 75 வயதுக்கு மேல் சர்க்கரை, இதயம் தொடர்பான பிரச்சனை கொண்டிருப்பவர்கள், கிறிஸ்துமஸ் அன்று அதிகளவில் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த ஆய்வின் முடிவின் படி,
புத்தாண்டு,
கோடைக்கால விடுமுறைகள்,
காலை 8 மணியளவு,
திங்கள் காலை
என்று மேற்கூறிய தருணங்களில் ஹார்ட் அட்டாக்குகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தில்லாத உணவு, பானங்கள், எமோஷனல் மன அழுத்தம், விடுமுறை காலங்களில் ஏற்படும் சோர்வு போன்ற காரணிகளால் ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதற்கு பெரும் பங்கு வகிப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்ட் அட்டாக்கை தவிர்ப்பதற்கான 5 வழிமுறைகள்:
ஆரோக்யமான டயட் எடுத்துக் கொள்வது அவசியம். கலவையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், ஒமேகா -3 fatty acids கொண்ட உணவுகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும். பல வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், உங்கள் உடல் அதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் அதுவாகவே எடுத்துக் கொள்கிறது.
அதிக உப்பு, கொழுப்பு நிறைந்த உணவு, இனிப்புகள், Red meats எனும் சிகப்பு இறைச்சிகள் போன்றவற்றை அறவே தவிர்ப்பது பெட்டர் என்கிறார்கள் மருத்துவர்கள். மதுவை தவிர்ப்பது நல்லது. அப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமெனில், அளவோடு சாப்பிடுவது நல்லது.
ஹார்ட் அட்டாக் ஏற்பட முக்கிய காரணியாக இருப்பது புகைப் பிடிக்கும் பழக்கம். அதனை முற்றிலும் ஒழித்துவிடுவது நல்லது.
உடலை புத்துணர்ச்சியோடும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயம் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம், உங்கள் இரத்த ஓட்டம் சீராகி, அதன் அழுத்தம் சமநிலையில் இருக்கும். நடை பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்றவை உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்பட வைக்கும். உங்கள் எடையையும் சீராகவே வைத்திருக்கும்.
இரத்தத்தில் உள்ள கொழுப்பு, இரத்த அழுத்தம், சுகர் போன்றவை சீராக உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து அறிய வேண்டியது அவசியம்.
ஸோ, விடுமுறை காலங்களில் எச்சரிக்கையோடு இருங்க!.