Advertisment

20 வயதைக் கடந்த மகளிரா நீங்கள்? அவசியம் மேற்கொள்ள வேண்டிய 4 பரிசோதனைகள் இவை...

மருத்துவர்களின் கூற்றுப்படி, 20 வயதைக் கடந்த மகளிர் அனைவரும் தங்களுக்கு இருதயம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறதா என அவசியம் பரிசோதிக்க வேண்டும். இதன் மூலம் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை விரைவாகவே கண்டறியலாம்.

author-image
WebDesk
New Update
Heart image

இருதய நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு ஏற்படுகிறது எனக் கருதப்படுகிறது. ஆனால், உலகளவில் பெரும்பாலான பெண்களின் மரணத்திற்கு இருதய நோய் வழிவகுக்கிறது. இருதய நோய் பெரும்பாலும் அறிகுறிகள் இன்றி வருகிறது. இல்லையென்றால் அதற்கான அறிகுறிகளை நம்மால் கண்டறிய முடியாத அளவிற்கு பெரிதாக இருப்பதில்லை. எனவே, சீரான இடைவேளியில் அது தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் அவசியம்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Heart health: Four tests every woman over 20 should get done to stay healthy

 

அதன்படி, 20 வயதைக் கடந்த மகளிர் அனைவரும் கீழ்கண்ட நான்கு பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்த பரிசோதனை:

உயர் இரத்த அழுத்தங்களே பெரும்பாலான நேரங்களில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. ஆனால், இதற்கான அறிகுறிகளை பெரியளவில் நம்மால் கண்டறிய முடியாது. எனவே, 20 வயதை கடந்த பின்னர் அவ்வப்போது இரத்த அழுத்தம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர் முகேஷ் கோயல் பரிந்துரைக்கிறார். இதில் ரத்த அழுத்தம் சீரான அளவில் இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

உயர் இரத்த அழுத்தத்தை கண்டு கொள்ளாமல் விட்டால், அவை சிறுநீரக பாதிப்பு, இருதய கோளாறு, பக்கவாதம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தக் கூடும். 

உடலில் கொழுப்பின் அளவை அறிந்து கொள்வது அவசியம்

உடலில் கொழுப்பின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது இருதய நோயின் அபாயத்தை குறைக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்புகள் அதிகமாக இருந்தால் அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும். அதனால், 20 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் தங்கள் உடலில் கொழுப்பின் அளவை பரிசோதிக்க வேண்டுமெனவும், குடும்பத்தில் யாருக்காவது கொழுப்பு இருந்தால், அவர்கள் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் மருத்துவர் தீபன்கர் வஸ்தா குறிப்பிட்டுள்ளார். வாழ்வியல் முறையில் மாற்றம் மற்றும் மருந்துகள் மூலம் கொழுப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்தல்

இருதய நோய்க்கான அடுத்த முக்கிய காரணியாக கருதப்படுவது சர்க்கரை நோய். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவை, இரத்த நாளங்கள் மற்றும் இருதயத்தை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலங்களை பாதிக்கும். எனவே, 20 வயது முதல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும். அதிகளவு பாதிப்பு இல்லாதவர்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்ளலாம். ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்தால் உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பி.எம்.ஐ (Body Mass Index)

Body Mass Index என்பதன் மூலம் நமது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையில் தான் இருக்கிறோமா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதனை பரிசோதித்து பார்த்தால் நம் உடல் பருமனாக இருந்தால் குறைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அதேபோல், உடல் எடை குறைவாக இருந்தாலும் இதில் நம்மால் கண்டு கொள்ள முடியும். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

heart health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment