மனதை உருக்கும் காதல் கதை... காதலன் கல்லறைக்கு மணக்கோலத்தில் வந்த பெண்

‘கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி’ என்ற நா. முத்துக்குமாரின் வரிகளில் மறைந்திருக்கும் உணர்ச்சி இது தானா? இந்த காதல் கதை அதை தான் உணர்த்துகிறது.

அமெரிக்காவில் காதல் வானில் இரக்கை கட்டி பறந்தவர்கள் ஜெஸிகா மற்றும் கெண்டல் ஜேம்ஸ். கெண்டல் தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தவர். இருவரும் ஒருவரை ஒருவர் அதீதமாக நேசித்து வந்ததையடுத்து இருவரின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.

சோகத்தில் முடிந்த காதல் கதை :

இருவருக்கும் செப்டம்பர் 29ம் தேதி திருமணம் நிச்சியம் செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்து வந்திருந்தனர். அத்தகைய நேரத்தில் தான் ஒருநாள் கெண்டல் காரில் சென்று கொண்டொருந்தபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணத்தை தழுவினார்.

love story, காதல் கதை

 

அவரின் இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதார் ஜெஸிகா. கெண்டல் மரணித்து 10 மாதங்கள் கடந்த நிலையிலும் துயரத்தில் இருந்து மீள முடியாமல் பரிதவித்து வந்தார்.

love story, காதல் கதை

அவர்கள் திருமணத்திற்காக குறிக்கப்பட்ட அதே 29ம் தேதி ஜெஸிகா மணப்பெண் போல ஆடை அணிந்து அலங்காரம் செய்துகொண்டு, கெண்டல் கல்லறைக்கு சென்றார். அங்கு அவரின் கல்லறையின் மீது சாய்ந்து கதறி அழுதார்.

love story, காதல் கதை

பின்னர் திருமணமான தம்பதிகள் எவ்வாறு புகைப்படம் எடுத்துகொள்வார்களோ அது போலவே ஜெசிகா தன் காதலன் கெண்டல் கல்லறையில் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வு பார்ப்பவர் அனைவரையும் கண்ணீர் மல்க உருக வைக்கிறது.

சாகும் தருவாயில் இருந்த காதலியை மணந்து, இறுதி ஆசையை நிறைவேற்றிய காதலன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close