குதிகால் வலி எதனால் ஏற்படுகிறது என்றும், இதற்கான தீர்வு என்ன என்பது குறித்தும் மருத்துவர் பால சுப்பிரமணியன் விவரித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் காணலாம். இதுகுறித்து மருத்துவர் பாலசுப்பிரமணியன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
உடல் எடை அதிகமானவர்கள், நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதிக நேரம் நின்று கொண்டு பணியாற்றுபவர்கள், புதிதாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குதிகால் வலி ஏற்படும் என மருத்துவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூங்கி எழுந்ததும் குதிகாலில் கடுமையான வலி ஏற்படும். நீண்ட நேரம் அமர்ந்து இருந்த பின்னர், திடீரென எழுந்து நடக்கும் போது சிலருக்கு குதிகால் வலி இருக்கும். இந்த பிரச்சனையை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என மருத்துவர் பாலசுப்பிரமணியன் அறிவுறுத்துகிறார்.
Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain (Home Remedy)
குதிகால் வலியை சரி செய்வதற்காக சில எளிய பயிற்சிகளையும் மருத்துவர் பால சுப்பிரமணியன் பரிந்துரைக்கிறார். இவற்றை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். இதற்கு பிரதானமாக மசாஜ் தெரபி செய்யலாம்.
மேலும், நீளமான துணியை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு, அவற்றை கால் விரல்களால் உள்பக்கமாக இழுக்க வேண்டும். இப்படி செய்தால் சிறிய தசைகளுக்கு அழுத்தம் கிடைக்கும். இதுவும் குதிகால் வலியை கட்டுப்படுத்த உதவும். இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என மருத்துவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கால் மேல் கால் போட்டு குதிகாலை அழுத்தி மசாஜ் செய்யலாம். இவ்வாறு தினமும் 10 முறை செய்வதன் மூலம் குதிகால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து இதை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் சுடுதண்ணீரில் கால் வைத்து தினமும் காலையில் ஒத்தடம் கொடுக்கலாம். இவற்றை தினசரி செய்து வருவதன் மூலம் குதிகாலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலும் வலி வெகுவாக குறைந்து வரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.