கடந்த 2020-ம் ஆண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் மேம்படுத்தி கொள்ள நாம் பெருமளவில் ஈடுபட்டதை மறந்துவிட முடியாது. தற்போதும், கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், அதே நிலையே தொடர்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது என்ற ஒற்றை காரணத்தால், பெரும்பாலான இந்தியர்களின் சமையலறையில் இஞ்சி, முக்கிய பங்காற்றி வருகிறது.
இஞ்சியில் 60 வகையான தாதுக்கள், 30 வகையான அமினோ அமிலங்கள், கண்டறியப்படாத 500 வகையான என்சைம்கள் ஆகியவை இஞ்சியை சிறந்த நோய் எதிர்ப்புச் சக்திமிக்க பொருளாக நிலைப்பெற வைத்திருக்கிறது என்கிறார், Medical Medium எனும் மருத்துவ இதழின் ஆசிரியர் அந்தோனி வில்லியம்.
இஞ்சி, தொண்டைப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய உதவுவதோடு, பதற்றம் மற்றும் தலைவலியை குறைக்கவும், உடலில் தேங்கியுள்ள லாக்டிக் அமிலத்தை இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்யவும், தோல் திசுக்களின் மூலமாக வெளியேற செய்யவும் உதவுகிறது. மேலும், சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பொருளாகவும், இயற்கை ஒட்டுண்ணிகளை விரட்டவும், உடலில் உள்ள வைட்டமின் பி-12 உற்பத்தியை மேம்படுத்தவும் இஞ்சி உதவி வருகிறது.
இஞ்சியை எளிமையான முறையில், இந்திய முறை சமையலில் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை போக்கவும், பதற்றத்தை தளர்த்தவும், ஒரு கப் சூடான இஞ்சி தேநீர் போதுமானது ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )