நாம் உண்ணும் உணவில் புரோட்டின் இருக்கிறதா?

நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

உயர் தர புரோட்டின் உள்ள இந்திய சைவ உணவுகள் புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு முதன்மையானது.

உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது.
இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல்,
சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால்
உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து என்பது
உடம்பிற்கு தினமும் தேவைப்படும் ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது. மேலும் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், முதலியவற்றில் புரோட்டின் சத்து உள்ளது. தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அதிக அளவில் புரோட்டின் இருக்கிறது. 100 கிராம்

சோயா பீன்ஸில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1)கிட்னி பீன்ஸ் :
சிகப்பு காராமணி என்றும் கிட்னி பீன்ஸ் என்றும் இதனை அழைக்கிறார்கள். இதற்கென்ற தனி
சுவையை கொண்டிருக்கும் இந்த வகை பீன்ஸ் கிட்னி வடிவத்தில் இருக்கும். இதில் பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு மற்றும் ப்ரோட்டீன் நிறைந்திருக்கிறது. அதோடு
இது பல்வேறு தொற்றுகளை எதிர்த்து போராடிடும் ஆற்றலையும் கொண்டது.

இதன் பயன்களை பார்த்தால், புற்று நோயைத் தடுக்கிறது. மக்னீசியம் நிறைந்திருக்கிறது இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் இருக்கும் செல்களை பாதுகாக்கிறது. இதில் விட்டமின் கேவும் இருப்பதால் ஆக்ஸிடேடிவ் ஸ்டரஸிலிருந்தும் இது நம்மை காப்பாற்றுகிறது.

நம் மூளையின் செயல்பாடுகளும் நரம்புகளுக்கும் விட்டமின் கே மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஸ்பிங்கோ லிப்பிட்ஸ் முறையாக உருவாவதற்கு இந்த பீன்ஸ் உதவுகிறது. அதோடு இதில் அதிகப்படியாக தையமைன் இருப்பதால் அவை மூளையின் செல்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற உதவிடுகிறது.

acetylcholine உற்பத்தி செய்து நினைவுத் திறனையும் அதிகரிக்கிறது. பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமிருக்கிறது. இது கார்போஹைட்ரேட்டின் மெட்டபாலிசத்தை குறைக்க பெரிதும்
உதவிடுகிறது. விரைவில் செரிமானம் ஆகிடும்.

2) பால் நன்மைகள் :

குழந்தையின் முதல் உணவு பால், இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப்பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை… ஏன் ஒட்டகப்பால் வரை தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்’
என்கிறது மருத்துவ உலகம்.

ஆனால், உண்மையில், தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்..

1. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2, எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது
அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை
பராமரிக்கும்.

3. இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல்பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும்,
புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

4. சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

5. பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின்
ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோ

6. தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா
எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

7. பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராகவைத்துக் கொள்ளும்.

3)பருப்பு :

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய
புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன.

சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில்
தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும்
நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில்
ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு,
பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

4)பச்சை பட்டாணி :
காய்கறிகள் என்றாலே நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடியது. அதிலும் பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில்
உள்ளது.

மேலும் இதில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற
ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல்
எடையை குறைக்க பயன்படுகிறது. பசியை தீர்க்கும் இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்
நமக்கு வயிறு நிறைந்த திருப்தியை கொடுக்கிறது. பசி மற்றும் உடல் எடை
இழப்பிற்கு உதவுகிறது.

சீரணத்தை மெதுவாக்கி பசியை போக்குகிறது. இதய ஆரோக்கியம் மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இது இரத்த அழுத்தம்
போன்றவற்றை தடுத்து இதய நோய்கள் வராமல டுக்கிறது. இதன் நார்ச்சத்தால் கெட்ட
கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய
ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close