/indian-express-tamil/media/media_files/2025/04/12/jsRBSInhDTrHDQG7UYEw.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/12/hMkNgXARmMr85FRgFdO8.jpg)
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
குறைவாக தண்ணீர் குடிப்பது, அளவுக்கு அதிகமாக (அ) மிகக் குறைவாக உடற்பயிற்சி செய்வது, உடற்பருமன், எடை குறைப்பு அறுவை சிகிச்சை, அதிகப்படியான உப்பு (அ) சர்க்கரையை உட்கொள்தல், நோய்த்தொற்றுகள் மற்றும் பரம்பரை ரீதியாக பிரச்னை இருத்தல், குடல் அழற்சி (இன்ஃப்ளமேஷன்)நோய், ஹைப்பர்பாராதைராய்டிசம், சோடியம் நிறைந்த உணவு.
/indian-express-tamil/media/media_files/2024/10/17/i4t1x6h6CI3wzUblpY8f.jpg)
சிறுநீரக கற்கள் ஏற்படுவதன் அறிகுறிகள்
முதுகின் கீழ்குதியில் இருபுறமும் கடுமையான வலி, வயிற்று வலி, சிறுநீரில் இரத்தம் காணப்படுத்தல், வாந்தி (அ) குமட்டல், குளிருடன் கூடிய காய்ச்சல், சிறுநீரில் மோசமான துர்நாற்றம் வீசுதல், மங்கலான அல்லது மஞ்சள் நிற சிறுநீர் ஆகியன சிறுநீர கற்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
/indian-express-tamil/media/media_files/LgxRSKR1OYusIkdgwrnG.jpg)
சிறுநீரக கற்களை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:
சிறுநீரக கற்களுக்கு நிவாரணம் தரும் சிறந்த வழிகளில் ஒன்று, போதுமான நீர்ச்சத்தினை உடலுக்கு வழங்குவதாகும். நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுநீரக கற்களை சிறுநீரின் வழியாக வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரக கற்களை வெளியேற்ற தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீரை பருகுவதால் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவும் அதிகரிக்கிறது; இது கல் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/cucumber.jpg)
வெள்ளரிக்காய்கள்:
நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இதில் முதன்மையானது வெள்ளரிக் காய்கள். உடலிலுள்ள நீர்ச்சத்தை சமன்செய்வதுடன், சிறுநீரக கற்களையும் வெளியேற்ற இந்த வெள்ளரிகள் உதவுகின்றன. அதேபோல, பழங்களில் மாதுளம், திராட்சை பழங்களை ஜூஸ் போல அல்லாமல், விதைகளுடன் சாப்பிட்டால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். இதனால் சிறுநீரக கற்கள் உருவாவதை தவிர்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/24/screenshot-2025-03-24-155829-977554.png)
வாழைத்தண்டு
சமையலில், பரங்கிக்காய், சுரைக்காய், என நீர்நிறைந்த காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. இதில் முக்கியமானது வாழைத்தண்டு. இந்த வாழைத்தண்டை பொரியல் (அ) ஜூஸ் போல செய்து சாப்பிடலாம்.. அடுத்ததாக முள்ளங்கியை சேர்த்து கொள்ளலாம்.. இதை தினமும் சமையலுக்கு பயன்படுத்த முடியாவிட்டாலும், ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. இவைகள் எல்லாம் சிறுநீர் பெருக்கி என்பதால், தினம் ஒரு காய்களை சாப்பிட வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project28.jpg)
தவிர்க்க வேண்டிய உணவுகள்
உப்பு, சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, கூல்டிரிங்ஸ்கள், சாக்லேட், ஆல்கஹால் இவைகளை தவிர்த்தாலே போதும், எப்போதுமே சிறுநீரகத்தில் கற்கள் சேராது..
/indian-express-tamil/media/media_files/V5tutj4TCInU02kYAz1y.jpg)
மருத்துவர்கள் அறிவுரை
சிறுநீரக கல்லின் அளவு 5 மி.மீக்கு குறைவாக இருந்தால் மட்டுமே வீட்டு மருத்துவம் பயன்படுமே தவிர, இதுவே தீர்வுகிடையாது. கற்களின் அளவு பெரிதானால், மருத்துவரை சந்திப்பது அவசியம் என்கிறார் டாக்டர் யோக வித்யா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.