குளிர் அழுத்தம்: குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் பேக்கை 15 நிமிடம் பல் வலிக்கும் இடத்தில் வைக்கலாம்.
மிளகு இலைகள்: மிளகு இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைட்: ஹைட்ரஜன் பெராக்ஸைட் ஆன்ட்டி பாக்டீரியா கொண்டு சம அளவு தண்ணீரையும் கலந்து 30 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.
கிராம்பு: கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பை சிறிய அளவு பொடி செய்து வலிக்கும் பல் மீது வைக்கலாம்.
கொய்யா இலை: பல் வலி, வாய்ப்புண் போன்ற பிரச்சனைக்கு நல்ல பலன் கொடுக்கும் கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
TOOTH ACHE RELIEF IN SECONDS - HOME REMEDIES
மஞ்சள் தூள்: பல்வலியை குறைக்க ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து அதை பேஸ்டாக வைக்கலாம். அதன் பின் இந்த பேஸ்ட்டை பற்களில் தேய்க்கவும்.
பூண்டு: பூண்டு சற்று இடித்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவலாம்.
வெங்காயம்: வெங்காயத்தை நறுக்கி வலிக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது சிறிய துண்டை அந்த பல்லின் மீது வைக்கலாம்.
உப்பு: உப்பை தண்ணீரில் கலந்து 30 நிமிடம் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“