இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் தங்களுக்கு கொழுப்பு மற்றும் இருதய நோய்கள் ஏற்பட்டு விடுமோ என அச்சம் கொண்டிருப்பார்கள். எனினும், நீண்ட நாள்களாக இரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, உணவு முறையில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என தற்போது காணலாம்.
இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்ற பயன்படுத்தலாம். இதேபோல், நல்லெண்ணெய்யும் அளவுடன் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது.
நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி, வெந்தயக் கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை ஆகியவற்றை சாப்பிடலாம். இதேபோல், பிரண்டையும் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
காலை உணவு எளிதானதாக இருத்தல் அவசியம். இட்லி, ஆப்பம், இடியாப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம். காய்கறிகளையும் வேக வைத்து சாப்பிடலாம்.
தினமும் மோருடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம். காலையில் 200 மி.லி அளவிற்கு மோர் குடித்தால் இரத்த அழுத்தம் குறையும். வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் இருக்கக் கூடிய பழங்களை சாப்பிடலாம்.
குறிப்பாக, மிளகு லேகியம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த அழுத்தம், கொழுப்பு, பித்தப்பையில் கற்கள் இருப்பவர்களுக்கு இதனை கொடுக்கலாம்.
100 - 150 கிராம் மிளகுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர், காலையில் இதை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 400 மி.லி வரும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். இதையடுத்து, நீரை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டும்.
300 கிராம் கற்கண்டு எடுத்து பாகு பதத்திற்கு காய்க்க வேண்டும். இந்த பாகுடன் மிளகு கசாயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் ஏலக்காய், ஓமம், சீரகம், சோம்பு, இலவங்கபபட்டை ஆகியவற்றை பொடியாக்கி 50 கிராம் சேர்க்க வேண்டும். இதில் சிறிது நெய் மற்றும் தேன் சேர்க்க வேண்டும்.
இந்த லேகியத்தை காலை மற்றும் இரவில் 4 கிராம் சாப்பிட்டால் இரத்த அழுத்தம், கொழுப்பு குறையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“