முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகளை இணையத்தில் ஆராய்ந்திருப்போம். மேலும், ஷம்பூ, ஹேர் ஆயில், சீரம் போன்ற பொருள்களையும் ஏராளமாக செலவு செய்து வாங்கி இருப்போம். ஆனால், இவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் விதமாக வீட்டிலேயே ஹேர் பேக் தயாரித்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் அரிசி சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் ஒரு முட்டை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இறுதியாக 3 டேபிள் ஸ்பூன் தயிரை இதில் சேர்க்கவும்.
இப்படி செய்தால் இரசாயனங்கள் கலக்காத ஹோம் மேட் ஹேர் பேக் தயாராகி விடும். இந்த ஹேர் பேக்கை தலையில் தேய்த்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
இதில் இருக்கும் வெந்தயம் முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஸ்டார்ச், அமினோ ஆசிட்ஸ், வைட்டமின்கள் ஆகியவை அரிசியில் நிறைந்திருக்கிறது. இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.