உடல் எடை அதிகமாக இருப்பதாக பலர் கவலைப்படுவார்கள். அதே நேரத்தில், உடல் எடை மிக குறைவாக இருப்பதும் ஆபத்து தான். சரியான உடல் எடையை பராமரிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
அதன்படி, உடல் எடை குறைவாக இருப்பவர்கள் அதனை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என இப்பதிவில் நாம் பார்க்கலாம். புரதச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிப்பது அவசியம் ஆகும்.
இதற்காக, புரோட்டின் பவுடர் எவ்வாறு தயாரிப்பது என தற்போது பார்க்கலாம். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கால் கப் கொண்டை கடலை போட வேண்டும். இதை நன்றாக வறுக்க வேண்டும். பின்னர், இதை தனியாக ஆறவைக்க வேண்டும். இதையடுத்து, அதே அளவிற்கு வேர்க்கடலையை எடுத்து அதையும் நன்றாக வறுக்க வேண்டும்.
முதலில், கொண்டை கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன் பின்னர், வேர்க்கடலையையும் அரைத்து எடுக்க வேண்டும். பின்னர், அரைத்த இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது, இதனை குடிக்கும் முறை குறித்து பார்க்கலாம். இந்தப் பொடியை 2 ஸ்பூன் அளவிற்கு மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் மூன்று பேரீச்சம்பழம், ஒரு கிளாஸ் பால், ஒரு வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“