koththu parotta recipe in tamil: தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் பிரபலமான உணவுகளாக வலம் வருகின்றன. எனினும், தமிழகத்தில் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் பரோட்டோ முக்கிய இடத்தை பிடிக்கிறது. அதிலும் கொத்து பரோட்டாக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
நமது ஊர் பரோட்டா கடைகளில் கிடைக்கும் இந்த கொத்து பரோட்டாவும் அவற்றுக்கென வழங்கப்படும் சால்னாவும் எப்போதுமே தனி ருசி தான். அப்படிபட்ட இந்த கொத்து பரோட்டாவை இப்போது நம்முடைய வீட்டிலே செய்து அசத்தலாம். அவற்றுக்கான சிம்பிள் டிப்ஸ்களை இந்த தொகுப்பதில் பார்க்கலாம்.

ஹோட்டல் ஸ்டைல் கொத்து பரோட்டா செய்யத் தேவையான பொருட்கள்
பரோட்டா – 2
முட்டை – 1
வெங்காயம் – 2
எண்ணெய் – 4 ஸ்பூன்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
ஹோட்டல் ஸ்டைல் கொத்து பரோட்டா சிம்பிள் செய்முறை
முதலில் பரோட்டாவை எடுத்து அவற்றை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடிப் பொடியாக யாக நறுக்கி கொள்ளவும்.
இதன்பிறகு தோசைக்கல் அல்லது ஒரு கனமாக பாத்திரம் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அவற்றில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
தொடர்ந்து தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
இவையனைத்தும் நன்றாக வதக்கிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றவும். அவற்றை தோசை கரண்டியால் நன்றாக கிளறிக்கொள்ளவும்.
பிறகு தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
இப்போது சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்க்கவும்.
பிறகு ஒரு டம்ளர் அல்லது தோசைக் கரண்டியால் பரோட்டாவை கொத்திக் கொள்ளவும். நன்றாக அதுபோல் செய்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி கீழே இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான கொத்து பரோட்டா தயாராக இருக்கும். அவற்றை சுட சுட பரிமாறி ருசிக்கவும். இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்தும் கொத்து பரோட்டா தயார் செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“