பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் அரங்கேறிய இஷா அம்பானி திருமணத்தில் தந்தையாய் அம்பானி கண்கலங்கி நின்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
அம்பானி வைரல் வீடியோ:
இஷா அம்பானி திருமணம்.. பாலிவுட்டி ஊடகங்களில் மட்டுமில்லை தமிழ், மலையாளம், என அனைத்திலும் பிரேக்கிங் நியூஸ் அளவிற்கு நொடிக்கு நொடிக்கு வீடியோ, புகைப்படங்களால் நிரம்பி வழிந்தது.
வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் தரையில் இறங்கியது போல், சினிமா, அரசியல்,விளையாட்டு, தொழிலதிபர்கள், என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமும் மும்பை மற்றும் உதய்பூரில் மையம் கொண்டனர்.
Advertisment
Advertisements
திருமணத்திற்கு முன்பு நடந்த சடங்குகள் அனைத்தும் உதய்பூரில் இருக்கும் புகழ்பெற்ற அரண்மனையில் அரங்கேறியது. ஆடை, ஆபரணத்தில் தொடங்கிய பிரம்மாண்டம் சாப்பாடு, கலை நிகழ்ச்சிகள், பரிசுப் பொருட்கள் என கண்களை விரிய வைக்கும் அளவிற்கு ராயலாக நடந்தது.
இதுவரை ஆசியாவில் நடந்த திருமணத்தை விட ஒருபடி மேலே சென்று, விலையுர்ந்த திருமணம் பட்டியலில் முதலிடத்தை பெற்றது இஷா அம்பானி திருமணம். காதல் கணவனை கரம்பிடித்த மகிழ்ச்சியில் இஷா அம்பானி ஆடிய பாடிய அனைத்து வீடியோக்களும் வைரல் தான்.
வைரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆடை, முத்து, பவளத்தில் ஆபரணங்கள், 500 வகையான சாப்பாடுகள், தங்கத்தில் பரிசு பொருட்கள், ஒரு திருமணத்த அழைப்பின் செலவு மட்டுமே 3 லட்சம் என.. வெளியான லிஸ்ட்டுகளை பார்த்த போது ”பொறந்த அம்பானி வீட்டில் பொறக்கணும்ப்பா” என பிரமிக்க வைத்தது.
மும்பையில் நடைப்பெற திருமணத்தில் தென்னாந்தியாவில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவை எல்லாவற்றையும் விட விழாவில் அரங்கேறிய மிக சிறந்த தருணம் என்னவென்றால் அது மகளின் திருமண கோலத்தை பார்த்து அம்பானியும், நீடா அம்பானியும் கண்கலங்கி அழுதது தான்.
A post shared by Glamour Alert (@glamouralertofficial) on
target="_blank" rel="noopener">Mukesh Ambani and Nita Ambani are couple goals in this pic! @glamouralertofficial ???????? * * * #MukeshAmbani #NitaAmbani #LoveBirds #CoupleGoals #IshaAmbani #AnandPiramal #GlamourAlert
A post shared by Glamour Alert (@glamouralertofficial) on
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்தாலும், அம்பானியும் தந்தை தானே, தனது மகளை திருமண கோலத்தில் பார்ப்பது என்பது அத்தனை பெற்றோர்களுக்கும் ஒரு கனவு போல்.. இஷா அம்பானியை அப்படி பார்த்த அம்பானியும் நீடாவும் கண்கலங்கி நின்றனர்
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதிலும் நீடா அம்பானி, கல்யாணம் முடிந்ததும் இஷாவை கட்டியணைத்து கண்ணத்தில் முத்தமிட்டார். இந்த நிகழ்வு அங்கிருப்பவர்களையும் கண்கலங்க வைத்தது.