ரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்!

திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஜியோ கார்டன்
ஜியோ கார்டன்

அம்பானியின் மகளான இஷா அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டனில் பிரம்மாண்டமாக அரங்கேறியது.

ஜியோ கார்டன்:

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக கடந்த 12 ஆம்  தேதி நடந்தது. இதில் அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு முன்பு நடந்த மகா ஆரத்தியில் நீதா அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.பாராத் நிகழ்ச்சியில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர்களான அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும் உறவினர்களை வரவேற்றனர். நடனங்கள், இசைநிகழ்ச்சிகள் என திருமண ஊர்வலம் களைகட்டியது.

dont miss it.. மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற அம்பானி

ஆடம்பரமாக அரங்கேறிய  இந்த திருமணம் ஆசியாவிலேயே விலையுர்ந்த திருமணம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

#IshaAmbani wears an ivory and gold lehenga custom created by Italian fashion house, #Valentino and we are ????. (????: Viral Bhayani)

A post shared by Niche Lifestyle® (@nichelifestyle) on

இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக புதுமணத் தம்பதிகள் குடியேறப் போகும் குலிடா இல்லத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

View this post on Instagram

 

Wish Isha and Anand #IshaAnand a very happy life ahead.. God Bless . . #ishaambani #Ishaambaniwedding

A post shared by Dr. Kiran Bedi (@kiranbediofficial) on

இந்த வீடு ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. மணமக்கள் ஆனந்த் –  இஷா இருவரும் திருமணத்திற்கு பிறகு இங்கு தான்  வாழ போகிறார்கள். இந்த இல்லத்திற்கு ஜியோ கார்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தில் நேற்று நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகள் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும்  வரவேற்பு நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரி, ஜாகீர் உசேனின் தபேலா என களைக் கட்டியது.

 

View this post on Instagram

 

Khalbali #ambaniwedding

A post shared by Snigdha Sahal (@sn1gdha) on

அதன் பின்பு பிரபலங்கள் வீட்டையும் சுற்றி பார்த்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

#ishaambani and #anandpiramal wedding photos

A post shared by Fashion Wear (@glamour_of_ethnic) on

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Isha ambani anand piramal wedding receptio

Next Story
அம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்!அம்பானி வைரல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express