சில உடல் தொடர்பான பிரச்சனைகளை நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள தயங்குவார்கள். அவ்வாறு பிரச்சனைகளை எப்படி கையாள்வது என தெரியாமல் கவலைப்படுபவர்கள் ஏராளம். அதன்படி, சிலருக்கு சிறுநீர் கசிவு பிரச்சனை இருக்கும். இவற்றை தடுப்பது எப்படி என மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைத்துள்ளார்.
சிறுநீர் கழித்த பின்னர், மீண்டும் கசிவு ஏற்பட்டு உள்ளாடைகளில் சிறுநீர் சொட்டுகள் இருப்பதை பலரும் உணருவார்கள். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில டிப்ஸ்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் கூறியவற்றை தற்போது காணலாம்.
ஆங்கிலத்தில் இதனை incomplete voiding of urine எனக் கூறுவார்கள். இந்த பிரச்சனை ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கு வரும். இவ்வாறு சில சொட்டுகள் கசிந்தால் தீவிர பிரச்சனை இல்லை என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பெரும்பாலும், பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கூடுமான வரை வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகப்படுத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
டாய்லட் சீட்டில் அமரும் போது முழங்கைகள் தொடைப்பகுதியை அழுத்தி இருக்கும் படி உட்கார வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், அடிவயிறு பகுதியை மெலிதாக தட்டினால் சிறுநீர் முழுவதும் வெளியேற உதவும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். இதேபோல், முதுகின் கீழ்ப்பகுதியை சற்று தடவி விடுவதும் சிறுநீர் முற்றிலும் வெளியேற உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த பிரச்சனை மிகத்தீவிரமாக இருந்தால் மருத்துவரை உடனடியாக ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“