By: WebDesk
Updated: January 14, 2019, 01:25:26 PM
Check how chennai celebrates pongal
How to Peform Poojai in Pongal: பொங்கல் பண்டிகை, தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பல்வேறு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அன்று பூஜைகள் வைப்பதையும் பாரம்பரியமாக கடை பிடித்து வருகிறார்கள். பூஜை வைக்கும் நேரம் தெரிந்து கொண்டீர்களா?
தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்பார்கள் நம் முன்னோர்கள். தை என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பொங்கல் தான். தை பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. நாம் அறுவடை செய்தவற்றையும், அறுவடை செய்ய உதவிய கால்நடைகளுக்காகவும் நன்றி கூறுவதே இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.
தை திருநாளின் முதல்நாள் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் மரபு. எதற்கும் ஒரு நேரம் காலம் என்று ஒன்று இருக்கும் அல்லவா?
வீட்டின் நடு கூடத்தில் புதுப்பானை வைத்து புது நெல் அரிசி, புது வெல்லம், நெய் இவைகளைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்க வேண்டும்.
எந்த நேரத்தில் பானை வைத்து பொங்கல் வைக்கலாம்? எப்போது படையலிட்டு சூரியபகவானை வழிபடலாம்? என நாள்காட்டிகளை பார்ப்பவர்களுக்கு மொத்த விளக்கமும் இங்கே.
நல்லநேரம் பார்த்து, பொங்கல் பொங்கச் செய்யவேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இன்னும் சிறப்பு.