நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது எல்லாமே சவாலானதாக இருக்கும். வேலைக்கு போவது, நண்பர்களுடன் பழகுவது ஏன் படுக்கையில் இருந்து எழுவதைக்கூட ஒரு போரட்டமாக நீங்கள் உணரலாம்.
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், சில விஷயங்களை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம்.
உங்கள் மன அழுத்தத்தை குறைக்கவும்!
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது. குறுகிய காலத்தில் பார்த்தால், இது ஒரு நல்ல விஷயம் , ஏனெனில் இது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது. இருப்பினும் நீண்ட காலத்திற்கு தொடரும் போது, மன அழுத்தம் உட்பட பல பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும்.
எனவே மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் எவ்வளவு நுட்பங்களைப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது, ஏனெனில் அது நீங்கள் மன நோய்க்கு ஆளாகும் அபாயத்தை குறைக்கும்.
சீரான தூக்கம் அவசியம்!
தூக்கமும் மனநிலையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. 2014ஆம் ஆண்டின் ஆய்வின்படி, சரியான தூக்கம் இல்லாததால் 80 சதவீத மக்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் மன அழுத்தத்துடன் இருப்பதால், இரவில் தூங்க முடியாதது போல் உணரலாம். மேலும் எப்போதும் சோர்வாக இருப்பதால் படுக்கையில் இருந்து எழவும் சிரமப்படுவீர்கள். எனவே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முதலில் சீரான தூக்கம் அவசியம். அதனால் தூங்க போவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே, உங்கள் போன், லேட்டாப் போன்றவற்றை அனைத்து விடுங்கள். மிதமான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்கலாம் அல்லது உங்கள் உடலை ஆசுவாசப்படுத்தும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யலாம்.
உங்கள் உணவுபழக்கத்தை மேம்படுத்துங்கள்!
உணவு மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தெளிவான தொடர்பை மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சில நேரங்களில் மூளைக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது. எடுத்துக்காட்டாக 2012ன் ஆய்வின்படி, ஜிங்(Zing) குறைபாடு மனச்சோர்வின் அறிகுறிகளுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் மனநல நல பிரச்சனைகளை சரிசெய்ய முடிவதால், நியூட்ரிசியன் சைக்யார்டி (Nutritional psychiatry) எனப்படும் மனநல மருத்துவம் தற்போது பிரதானமாகி வருகிறது.
எதிர்மறை எண்ணங்களில் இருந்து இருந்து விலகியிருங்கள்!
மன அழுத்தம் உங்களை சோகமாக உணர வைப்பதுடன் மேலும் எதிர்மறையாகவும் சிந்திக்க வைக்கும். இந்த எதிர்மறை எண்ணங்களை மாற்றுவதன்மூலம், உங்கள் மனநிலையை நீங்கள் மேம்படுத்தலாம். மேலும் ஆரோக்கியமற்ற சிந்தனை முறையை எவ்வாறு மாற்றுவது என்பதற்காக நிறைய புத்தகங்கள், செயலிகள், ஆன்லைன் படிப்புகள் உள்ளன. அதன்மூலம் உங்கள் பிரச்சனைக்கான தீர்வை நீங்களே கண்டுபிடித்து, மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
தள்ளிப்போடுவதை நிறுத்துங்கள்!
சோர்வு, கவன குறைபாடு, வேலைகளை செய்யமுடியாமல் தள்ளிப்போட தூண்டுவது போன்றவை தான் மன அழுத்தத்துக்கான முதல்கட்ட அறிகுறிகள். வேலைகளை செய்யாமல் தள்ளிப்போடுவதால் உங்களின் மனச்சோர்வு மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் குற்ற உணர்ச்சி, கவலை, மன அழுத்தம் மேலும் அதிகமாகும்.
எனவே வேலைகளை செய்ய உங்களுக்கு நீங்களே காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்வதன் மூலம் உங்கள் நேரத்தை நன்றாக உபயோகிக்க முடியும். குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்து, மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்ய கடினமாக உழைக்கவும். நீங்கள் வெற்றிகரமாக முடிக்கும் ஒவ்வொரு பணியும் தள்ளிப்போடும் பழக்கத்தை உடைக்க உதவும்.
இவை அனைத்தையும் விட முக்கியம், உங்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் உடனே மனநல மருத்துவரை அணுகவும். மருத்துவ பரிந்துரையின் பேரில், மாத்திரை மருந்துகளை எடுத்துவர மனநலம் சார்ந்த பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil