How to correct pf details Online: நீங்கள் சம்பள ஊழியராக இருந்தால் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதி பி.எஃப் கணக்கில் செல்கிறது. ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் Dearness Allowance இல் சுமார் 12 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (ஈபிஎஃப்) செல்கிறது.
PF பதிவுகளில் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள் போன்ற திருத்தங்களை ஆன்லைனில் செய்ய EPFO அனுமதிக்கிறது.
ஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி?
உங்கள் பி.எஃப் கணக்கில் திருத்தங்கள் செய்வது எப்படி?
EPFO ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
அதில், UAN மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்ளே நுழையுங்கள்.
பிறகு, Manage என்பதைக் கிளிக் செய்து, அதில் 'Modify Basic Details' என்பதை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் சரிபார்க்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அவற்றைத் திருத்த முடியாது
அவ்வாறு இல்லையென்றால், தேவைக்கேற்ப விவரங்களைத் திருத்தவும்
Update Details என்பதைக் கிளிக் செய்து திருத்தங்களை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும்
உங்கள் பி.எஃப் கணக்கு விவரங்களில் மாற்றங்களைச் செய்ய இந்த நான்கு விஷயங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்:
செயல்பாட்டில் உள்ள UAN
EPFO இன் Unified Portal Websiteன் உள்நுழைவு அனுமதி இருக்க வேண்டும்.
ஆதார் எண்
நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்கள் கோரிக்கையை ஆன்லைனில் அனுப்ப வேண்டும்
ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வரை தரும் ப்ரீபெய்ட் ப்ளான்கள் என்னென்ன?
EPFO பற்றி சில தகவல்கள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர் வருங்கால வைப்பு நிதியை ஊக்குவிக்கிறது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டத்தின் (1952) கீழ் முக்கிய திட்டமாகும்.
இந்த நீண்டகால முதலீட்டுத் திட்டம் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான வருங்கால வைப்பு நிதியை வழங்குகிறது. பணியாளர் மற்றும் நிறுவனம் சார்பில் தனித்தனியாக ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் Dearness Allowance (டிஏ) ஆகியவற்றில் 12% ஈபிஎஃப்-க்கு பங்களிக்கப்படுகிறது. தற்போது, ஈபிஎஃப் வைப்புகளுக்கான வட்டி விகிதம் 8.65% p.a. ஆகும்.