பனிக்காலங்களில் உருவாகக்கூடிய பாத வெடிப்பு, பித்த வெடிப்பு போன்றவை சிலருக்கு இருக்கும். அதற்கு காரணம் வறட்சி, பித்தம், உடல் பருமன், நீண்ட நேரம் நிற்பவர்களுக்கும் பாதவெடிப்பு உண்டாகும். அதனை எப்படி சரிசெய்யலாம் என்று ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் மருத்துவர் ஜெயரூபா கூறியிருப்பதாவது,
டிப்ஸ் 1: வெதுவெதுப்பான் நீரில் கல் உப்பு போட்டு காலை ஊற வைத்து தேய்த்து எடுக்கவும்.
டிப்ஸ் 2: பாதம் வெடிப்பு அதிகம் இருப்பவர்கள் எண்ணெய் தேய்த்து குளித்து உடல் பித்தத்தை குறைக்கவும்.
டிப்ஸ் 3: நெல்லிக்காயை சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் 3 நாள் ஊறவைத்து வைக்கவும். பின்னர் இதை நன்கு பிசைந்து தண்னீர் வற்றி தைலம் மாதிரி வரும் அதை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
டிப்ஸ் 4: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சில மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் வாங்கி பயன்படுத்தவும்.
பாத வெடிப்புக்கு காரணம் வறட்சியான சருமம், அதிக உடல் எடை, தோல் அலர்ஜி மற்றும் ஒவ்வாமை, தைராய்டு, PCOD , அதிக பித்தம் போன்ற காரணங்களினால் காலில் வெடிப்புகள் ஏற்படும் என மருத்துவர் ஜெயரூபா கூறுகிறார்.
பாதவெடிப்பு போக, கால்கள் பளபளக்க – இயற்கை வழி!
வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பை கரைத்து கால்கள் மட்டும் மூழ்குமாறு செய்து ஸ்கரப்பிங் செய்தல் அவசியம். நெல்லிக்காய் வடித்த கஞ்சியுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்த தைலம் தலையில் தேய்த்து குளிப்பது, கால் வெடிப்புகளில் தேய்த்து வர பித்தம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பித்த வெடிப்புகள் குணமாகும்.
மருதாணி இலைகளுடன் ஊறவைத்த பசுநெய் கால்களில் தடவி வரலாம்.
அதுமட்டுமின்றி கால் வெடிப்பு சாரியாக உணவிலும் கவனம் தேவை. அதற்கு வேகவைத்த உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற உணவு வகைகள் எடுத்து கொள்ளவும்.
உடலின் நல்ல பாக்டீரியாக்கள், வைரஸ் சமநிலையாகிடும் தன்மையை உருவாக்குவது போன்றவைகளை பின்பற்றி கால்களில் உண்டாகிடும் வெடிப்புகளுக்கு நிவாரணம் பெறலாம் என அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.