How to make tasty healthy pesarattu dosai : ஆரோக்கியமான காலை உணவை தயாரிப்பதற்கு மிகவும் கஸ்ரப்பட வேண்டியிருக்கு. இதில் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் உரிய நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்காது.
காலை நேரத்தில் நம் உடலில் மெட்டபாலிசம் மிக வேகமாக இருக்கும். மெட்டபாலிசம் விரைவாக இருக்கும்போது உடலில் கலோரிகள் மிக விரைவாக விரையமாகின்றது. எனவே காலையில் நாம் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதே மிகச் சிறந்தது.
பெசரட்டு தோசை:
பெசரட்டு தோசையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. ஏனெனில் அது பாசி பருப்பு மற்றும் கீரை சேர்த்து தயாரிக்கப்படுகின்றது. இந்த புரதம் நிறைந்த தோசை மாவை தயாரிக்க பாசி பயிறை ஊற வைக்கவும். அதேபோல், ஊறவைத்த அரிசி மற்றும் கீரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இந்தக்கலவையுடன் வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். காலை நேர உணவாக இதனை சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
மேலும் படிக்க : தோல் பராமரிப்புக்கு ஆதாம் காலத்து தீர்வு பாதாம்…