சுற்றுலா செல்வது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். ஒரு புதிய இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நம்மை பரவசமடையச் செய்கிறது. ஆனால் எல்லோரும் அடிக்கடி சுற்றுலா செல்வதில்லை. அதிகமான பணத்தேவையும், இதர செலவுகளும் அவர்களை உலகை சுற்றி பார்ப்பதிலிருந்து தடுத்துவிடுகிறது. ஆனால் நீங்கள் சில புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தால் உலகம் உங்கள் விளையாட்டு மைதானமாக ஆகிவிடும். அடுத்த சுற்றுலாவை நீங்கள் திட்டமிடும் முன்பு, அதை மிகவும் குறைந்த செலவில் மகிழ்ச்சியாக சென்றுவர நாங்கள் உங்களுக்கு சில யோசனைகளை தருகிறோம்.
சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடல் தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு
பயணத்திற்கான வரவு செலவு திட்டத்தை முன்பே உருவாக்குங்கள்
குறிப்பாக உங்களிடம் மிகுதியான பணம் இல்லாதபோது முதலில் முக்கியமானதாக ஒரு பயண வரவு செலவு திட்டத்தை உருவாக்குங்கள். இது உங்களிடம் எவ்வுளவு பணம் உள்ளது என்பதை எப்போதும் நீங்கள் தெரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதோடு உங்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு உங்கள் பயணத்தை திட்டமிடவும் அதற்கேற்றார் போல் உங்கள் செலவுகளை தீர்மானிக்கவும் உதவும். தங்கும் இடம் மற்றும் உணவு போன்ற சில விஷயங்களுக்கு நீங்கள் முழுமையாக செலவு செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் ஏனைய விஷயங்களுக்கு நீங்கள் ஏற்கனவே போட்டு வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் செலவு செய்துக்கொள்ளலாம். இது உங்கள் பயண நடைமுறையை எளிதாக்கும்.
சலுகைகளை பயன்படுத்துங்கள்
விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் கடன் அட்டை நிறுவனங்கள் வழங்குகின்ற பல்வேறு சலுகைகளை அனுகூலமாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அவை வழங்கும் புள்ளிகளை திரட்டி அதன்மூலம் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி இலவச தங்கும் வசதி போன்றவற்றை அனுபவித்துக்கொள்ளுங்கள். அந்நிறுவனங்களில் ஏற்கனவே உள்ள திட்டங்கள் மற்றும் விதிகளை நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
சீசன் இல்லத காலங்கள்
முடிந்தால் சில இடங்களுக்கு சீசன் இல்லாத காலங்களில் சென்று வாருங்கள். இதன்மூலம் கூடுதல் கட்டணங்களையும் அதிக கூட்டத்தையும் தவிர்க்கலாம். பல சுற்றுலா தலங்களில் கூட்டம் இல்லாத பருவங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல சலுகைகள் வழங்குவார்கள். ஆனால் அந்த மாதரி பருவம் இல்லாத காலங்களில் செல்லும் போது உள்ளூர் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள் திறந்து இருக்குமா என்பதையும் முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
விமான நிறுவனங்களின் பயணக் கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்
நீங்கள் சுற்றுலாவுக்கு ஒதுக்கும் பணத்தில் பெரும் பகுதி பயண்ச்சீட்டு எடுப்பதிலேயே செலவாகிவிடும். எனவே பயணச் சீட்டு எடுப்பதர்க்கு முன்பு பல நிறுவனங்களின் கட்டணங்கள் மற்றும் அவர்கள் வழங்கும் சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து, குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பயணச்சீட்டுக்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.