இன்றைய தலைமுறையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வது தான். முடி உதிர்தல் கூட எல்லோருக்கும் உதிர்வது போல் இருந்தால் அது சாதாரண பிரச்சனை தான்.
அதுவே, வழுக்கை தலை வரை சென்றால், அவர்களால் இரவில் நிம்மதியாக தூங்க கூட முடியாது. இந்த பிரச்சனையை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்று எண்ணி, அவசர அவசரமாக கண்ட விளம்பரங்களை பார்த்து செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிது தான் நாம் செய்யும் மிக முக்கியமான தவறு.
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி வழுக்கை விழுதல் என்பது அவர்களின் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும். இது தான் வழுக்கை விழுவதற்கான அடிப்படை காரணம்.
அதைத்தவிர, 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், புகைப்பிடிப்பது, சில குறிப்பிட்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மற்றும் மரபு சாந்த பிரச்சனைகள். இப்படி அனைத்து தரப்பினருக்கும் ’தலை’ யாக பிரச்சனையாக இருக்கும் வழுக்கை விழுதலை இயற்கை முறையில் தடுக்கும் வழிமுறைகள்.
1. முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. உருளைக்கிழங்கில் புரோட்டீன் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
2. செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கரப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
3. முட்டையை 2 எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கரப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு தலை முடியை அலச வேண்டும்.
4. நெல்லிக்காயை 2 கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எணணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
5. சின்ன வெங்காயத்தை அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வர முடி வளர்வதை காணலாம்.