/tamil-ie/media/media_files/uploads/2020/02/a58.jpg)
how to update pf details in online
How to correct pf details Online: சிலருக்கு அவர்களின் PF கணக்கிற்கு பணம் செல்வதே தெரியாது. சிலருக்கும் தெரிந்தும், எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்பதும், அதை எப்படி பார்ப்பது என்பதும் தெரியாது. இதை யாரிடம் சென்று கேட்பது என்பதும் தெரியாது. சிலருக்கு இவையெல்லாம் தெரிந்திருந்தாலும், அக்கவுன்ட்டில் சில தகவல்களை எப்படி மாற்றுவது என்று தெரியாது. இந்த அன்பர்கள் அனைவரும் இந்த செய்தியை கட்டாயம் படிக்க வேண்டும்.
உங்கள் PF கணக்கில் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள் போன்ற திருத்தங்களை ஆன்லைனில் செய்ய EPFO அனுமதிக்கிறது.
ஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி - நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்
உங்கள் பி.எஃப் கணக்கில் ஆன்லைன் வாயிலாக எப்படி திருத்தம் மேற்கொள்வது என்பதை எளிதான புரிதலுடன் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்,
EPFO ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
அதில், UAN மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்ளே நுழையுங்கள்.
பிறகு, Manage என்பதைக் கிளிக் செய்து, அதில் 'Modify Basic Details' என்பதை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் சரிபார்க்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அவற்றைத் திருத்த முடியாது
அவ்வாறு இல்லையென்றால், தேவைக்கேற்ப விவரங்களைத் திருத்தவும்.
Update Details என்பதைக் கிளிக் செய்து திருத்தங்களை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும்.
உங்கள் பி.எஃப் கணக்கு விவரங்களில் மாற்றங்களைச் செய்ய இந்த நான்கு விஷயங்கள் முக்கியம்
செயல்பாட்டில் உள்ள UAN
EPFO இன் Unified Portal Websiteன் உள்நுழைவு அனுமதி இருக்க வேண்டும்.
ஆதார் எண்
நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்கள் கோரிக்கையை ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.