பிஎஃப் கணக்கில் திருத்தம் செய்வது அவ்வளவு பெரிய விஷயமல்ல - 10 நிமிடம் போதும்

உங்கள் பிஎஃப் கணக்கில் ஆன்லைன் வாயிலாக நீங்களாகவே எப்படி தேவையான தகவல்களை மாற்றுவது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்

How to correct pf details Online: சிலருக்கு அவர்களின் PF கணக்கிற்கு பணம் செல்வதே தெரியாது. சிலருக்கும் தெரிந்தும், எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்பதும், அதை எப்படி பார்ப்பது என்பதும் தெரியாது. இதை யாரிடம் சென்று கேட்பது என்பதும் தெரியாது. சிலருக்கு இவையெல்லாம் தெரிந்திருந்தாலும், அக்கவுன்ட்டில் சில தகவல்களை எப்படி மாற்றுவது என்று தெரியாது. இந்த அன்பர்கள் அனைவரும் இந்த செய்தியை கட்டாயம் படிக்க வேண்டும்.


உங்கள் PF கணக்கில் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள் போன்ற திருத்தங்களை ஆன்லைனில் செய்ய EPFO அனுமதிக்கிறது.

ஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி – நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்

உங்கள் பி.எஃப் கணக்கில் ஆன்லைன் வாயிலாக எப்படி திருத்தம் மேற்கொள்வது என்பதை எளிதான புரிதலுடன் இங்கே தெரிந்து கொள்ளுங்கள், 

EPFO ​ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்

அதில், UAN மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்ளே நுழையுங்கள்.

பிறகு, Manage என்பதைக் கிளிக் செய்து, அதில் ‘Modify Basic Details’ என்பதை தேர்ந்தெடுக்கவும்

உங்கள் சரிபார்க்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அவற்றைத் திருத்த முடியாது

அவ்வாறு இல்லையென்றால், தேவைக்கேற்ப விவரங்களைத் திருத்தவும்.

Update Details என்பதைக் கிளிக் செய்து திருத்தங்களை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும்.

உங்கள் பி.எஃப் கணக்கு விவரங்களில் மாற்றங்களைச் செய்ய இந்த நான்கு விஷயங்கள் முக்கியம்

செயல்பாட்டில் உள்ள UAN

EPFO இன் Unified Portal Websiteன் உள்நுழைவு அனுமதி இருக்க வேண்டும்.

ஆதார் எண்

நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்கள் கோரிக்கையை ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.

சம்பளதாரர்களுக்கு ஐந்து சிறப்பான வரி சேமிப்பு தேர்வுகள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close