உதிரி உதிரியான இடியாப்பம்; இனிமே இப்படி செஞ்சு பாருங்க

String hoppers Recipe in tamil: அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம்

Idiyappam Recipe in Tamil | How to make Idiyappam in Tamil | String hoppers Recipe

Idiyappam Recipe in Tamil: தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன.

ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி மாவு – 1 1/2கப்,

தண்ணீர் – 1/2 கப்,

நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – ஒரு மூடி

உப்பு – தேவையான அளவு,

நெய் அல்லது நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் ஒன்றரை கப் இடியாப்ப மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டுப் பிசைந்துகொள்ளவும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு மாவை நன்றாகப் பிசைந்து கொள்ளவும். நாம் பிசையும் மாவு மென்மையாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு அவை கையில் ஒட்டக்கூடாத பதத்திற்கும் இருக்க வேண்டும். இந்த மாதிரியான பதத்துக்கு அவை வந்த பிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து இட்லித் தட்டில் பிழியவும்.

பிறகு, அவற்றை 5 நிமிடங்களுக்கு இட்லியை வேக வைப்பது போல ஆவியில் வேகவைக்க வேண்டும். அவை நன்கு வெந்த பிறகு கீழே இறக்கி கொள்ளலாம்.

நாம் அவற்றை சாப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

நாம் தயார் செய்து வைத்துள்ள சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம். அசைவ பிரியர்கள் ஆட்டுக்கால் பாயாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மிகுந்ததாக இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்ற உணவாக உள்ள இட்லி, ஆப்பம், ஊத்தாப்பம், கொழுக்கட்டை போன்வற்றின் வரிசையில் உள்ள இடியாப்பத்தை கண்டிப்பாக நீங்களும் தயார் செய்து உங்கள் குழுந்தைகளுக்கு கொடுக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Idiyappam recipe in tamil how to make idiyappam in tamil string hoppers recipe

Next Story
80களில் 5 மொழி ஹீரோயின்… சின்னத்திரையில் ஜாலியான பாட்டி.. சுந்தரி சீரியல் காந்திமதி லைஃப் ட்ராவல்..varalaskshmi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express