Idli Bajji Recipe in tamil: நம்முடைய வீடுகளில் ஸ்நாக்ஸ் தயார் செய்ய நாம் அதிகம் சிரமப்படுகிறோம். அதிலும் குழந்தைகள் பெரியவர்கள் விரும்பும் ஸ்நாக்ஸ் தயார் செய்ய நமக்கு ஒரு முழு நாளுமே காலியாகி விடுகிறது. இதற்காகவே நாம் பல செய்முறை குறிப்புகளை கூகுளில் தேட முயன்று வருகிறோம். அப்படி கஷ்டப்பட்டு தேடாமல் இருக்க ஈஸியான ஸ்நாக்ஸ் செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
பொதுவாக காலையில் தயார் செய்து மீந்துபோன இட்லியில் மாலை இட்லி உப்புமா தயார் செய்வோம். ஆனால், அந்த இட்லியில் சுவையான பஜ்ஜி எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
மீந்துபோன இட்லியில் பஜ்ஜி - தேவையான பொருட்கள்
வேக வைத்த இட்லி
உருளை கிழங்கு
மிளகாய் தூள்
வெங்காயம்
சீரகம் பஜ்ஜி மாவு
அரிசி மாவு
எண்ணெய், உப்பு
மீந்துபோன இட்லியில் பஜ்ஜி சிம்பிள் செய்முறை
இந்த சிம்பிள் செய்முறைக்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர், அவற்றுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு இந்த மாவை வடை போல் தட்டி கொள்ளவும்.
இப்போது மீந்துபோன இட்லியை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி, வடை போல் தட்டி வைத்துள்ள மசாலாவில் வைக்கவும்.
அதன் பின்பு, ஒரு அகலமான பாத்திரம் எடுத்து, அதில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜிக்கான மாவு தயார் செய்துகொள்ளவும்.
நாம் தயாரித்துள்ள இந்த பஜ்ஜி மாவில், ஸ்டஃப் செய்த இட்லியை மூழ்கடித்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
இப்போது டேஸ்டியான இட்லி பஜ்ஜி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த சட்னி, சாம்பார்களுடன் சேர்த்து ருசிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.