Idli recipe in tamil: தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு முக்கிய காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லியை தயார் செய்ய அவற்றுக்கான மாவு முக்கியம். அதிலும் அந்த மாவு சீக்கிரமே புளிக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.
இட்லி மாவு புளிக்கமால் இருக்க என்னதான் நாம் பல வழிமுறைகளை பின்பற்றி இருந்தாலும் சில சமயங்களில் அவை சரியாக வேலை செய்திருக்காது. அவ்வாறு இல்லாமல் ஒரு வாரம் ஆனாலும் மாவு புளிக்காமல் அப்படியே இருக்க இந்த குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கவும்.
இட்லி மாவு ஒரு வாரம் புளிக்காமல் இருக்க டிப்ஸ்:
நாம் தயார் செய்யும் இட்லி மாவு புளிக்காமல் வைத்திருப்பதற்கு முதலில் மாவு அரைக்கும் கிரைண்டரை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளவும். கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.
அரிசி மற்றும் உளுந்து குறைந்தது 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் புளித்து போக வாய்ப்பு உள்ளது.
கிரைண்டரில் அரிசி அரை பட 15 நிமிடமே போதுமானது. உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அரைத்து கொள்ளலாம்.
இப்படி செய்யும் போது அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து ஒன்றாக சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியம் இருக்காது. கிரைண்டரிலேயே நன்கு கலந்து சூப்பராக இருக்கும்.
மாவு அரைத்த 5 நிமிடத்திற்கு பிறகு மாவை கையால் எடுக்காமல் கரண்டியால் எடுத்துக்கொள்ளவும்.
எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.
கிரைண்டரில் மீதமிருக்கும் மாவை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து புளிக்க வைத்து மறுநாள் காலையில் இட்லி சுட்டுக்கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவை இட்லி சுட 4 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளலாம்.
மாவு எடுக்கும்போது நம்முடை கை மாவில் படாமல் இருந்தால் மாவு ஒரு வாரம் வரை இருக்கும்.
இப்படியான சிம்பிள் டிப்ஸ்களை பயன்படுத்தி இட்லி மாவை ஒரு வாரம் வரை புளிக்காமல் வைத்து இட்லி சுட்டு மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.