Idli recipe in tamil: இந்திய உணவுகளில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக இட்லி உள்ளது. அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இது உள்ளது. சூடான இட்லிகளை சில வகை சட்னிகளுடனும், வீட்டில் வைக்கும் குழம்புகளுடனும் சேர்த்து சுவைத்தால் திருப்தியான உணவு உண்பதற்கு ஈடாக இருக்கும்.
அப்படிப்பட்ட இட்லிகளை சில சமயங்களில் மிருதுவானதாக சமைக்க முடிவதில்லை. இதற்கு நாம் பெரிதாக மெனக்கெட வேண்டாம். இந்த சிம்பிள் ட்ரிக்ஸை பயன்படுத்தி மாவை அரைத்துப் பாருங்கள். இட்லி சுடுவதில் நிபுணர் பட்டம் பெறலாம்.

சாஃப்ட் இட்லிக்கு தேவையான பொருட்கள்:-
இட்லி அரிசி – 5 கப்
உளுந்து – 1 கப்
வெள்ளை அவல் – கால் கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உப்பு – 3 ஸ்பூன்
சாஃப்ட் இட்லிக்கு செய்முறை:-
முதலில் அரிசி , உளுந்து , அவல் மூன்றையும் ஒரே கப்பில் அளவு எடுத்துக்கொள்ளவும். பின்னர் அவை மூன்றையும் தனித்தனி பாத்திரத்தில் இட்டு ஊற வைக்கவும்
இவற்றை நான்கு மணி நேரம் மறக்காமல் ஊற வைக்கவும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசி இவற்றுடன் கலந்துகொள்ளலாம்.
சாஃப்ட் இட்லிக்கான இந்த 3 பொருட்கள் நன்கு ஊறிய பிறகு, முதலில் ஊற வைத்த உளுந்தை அரைக்கவும். உளுந்து கெட்டியாக பஞ்சு போல் உப்பி வரும். அவ்வாறு வந்தால் நன்கு அரைத்துவிட்டதென அர்த்தம். இப்போது அவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அரிசியை கொட்டி அரைக்கவும், அரிசி முற்றிலும் நைஸ் பதத்திற்கு அரைக்கக் கூடாது. சற்று மொறமொறப்பாக அரைத்திக்கொள்ளவும். அவ்வாறு அரைக்கும் போதே அதில் மூன்று ஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதோடு அரைத்த உளுந்தையும் கொட்டி கலந்து அரைத்தால் மிக்ஸிங் செய்யும் வேலை நமக்கு மிச்சம்.
இப்போது நாம் அரைத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
8 மணி நேரம் கழித்து நாம் பார்த்தல் அவை புளித்து உப்பி வரும்.
இப்போது நாம் விரும்பிய சாஃப்ட் இட்லி செய்து மகிழலாம். தவிர தோசை, ஆப்பம் என விருப்பம் போல் சுட்டு சுவைக்கலாம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil