Idli recipe in tamil: உலகில் சிறந்த உணவுகளில் ஒன்றாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அற்புதமான காலை உணவு தான் இட்லி. பலரும் இட்லியின் தாயகம் தென்னிந்தியா என்கிறார்கள். ஆனால் சிலர் அது இந்தோனேசிய உணவுகளில் ஒன்றாக இருந்தது என்கிறார்கள். எது எப்படியோ நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாகவே இட்லி இருக்கிறது.
கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி தயார் செய்ய உங்களுக்காவே சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.
சாஃப்ட் இட்லிக்கு சிம்பிள் டிப்ஸ்
நம்முடைய வீடுகளில் தயார் செய்யப்படும் இட்லிகள் பல நேரங்களில் அவ்வளவு சாஃப்ட்டாக இருப்பதில்லை. இதனால் நமக்கு சாப்பிட மனமே வருவதில்லை. சாஃப்ட்டான, பூப்போன்ற இட்லிக்கு சில முக்கியமான ரகசியங்கள் உள்ளன. அவற்றை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இட்லி தயார் செய்ய புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி தான் பயன்படுத்த வேண்டும். மிகவும் நீளமான அரிசி வகைகளை பயன்படுத்த வேண்டாம்.
2;1 என்ற விகிதத்தில் தான் அரசியும் உளுந்தும் இருக்க வேண்டும். பாரம்பரியமாக கறுப்பு உளுந்து தான் நமது வீடுகளில் பயன்படுத்துவார்கள். ஆனால் அதன் தோளை நீக்குவதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வெள்ளை உளுந்து வாங்கப்படுகிறது.
இட்லிக்கு வெந்தயம் தான் முக்கிய ரகசிய பொருள். ஊறவைத்த வெந்தயத்தை அரிசியுடன் சேர்த்து அரைத்தால் சூப்பரான சாஃப்ட்டான இட்லி ரெடியாகி விடும். ஆனால் அளவுக்கு அதிகமாக போனால் கசந்துவிடும்.
கல் உப்பு பயன்படுத்தினால் அதன் ருசியே தனி தான். இன்னும் மென்மையான இட்லிக்கு பல இடங்களில் அவுல் சேர்த்து மாவை அரைப்பது உண்டு.
இட்லிக்கு தண்ணீர் பதமும் முக்கியம் ஒன்றாகும். மாவு புளித்தவுடன் கொஞ்சம் இலகும். எனவே தண்ணீர் அளவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் கிரைண்டர் இல்லை என்றால் மிக்ஸியில் மாவினை அரைக்கலாம். அப்போது குளிர்ந்த நீரை அதில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இட்லி தட்டில் எண்ணெய் தேர்த்து பிறகு மாவினை ஊற்றுங்கள். நன்றாக வெந்த பின்பு, ஷார்ப்பான கரண்டி கொண்டு இட்லியை எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“