IMF Chief Economist Gita Gopinath : அனைத்து உலக நாணய நிதியம் அல்லது பன்னாட்டு நிதியம் என்று அழைக்கப்படும் ஐ.எம்.எஃப்.-இன் (International Monetary Fund) தலைமை பொருளாதார ஆலோசகராக ஒரு பெண் பதவி ஏற்பது இதுவே முதல்முறை. அதுவும் இந்தியாவைச் சேர்ந்த பெண் என்பது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விசயம் தான்.
ஏற்கனவே இந்த பதவியை அலங்கரித்த இந்தியர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அக்டோபர் மாதமே இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் இந்த பதவியை வகிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.எம்.எஃப்.
IMF Chief Economist Gita Gopinath
இதற்கு முன்பு ஐ.எம்.எஃப்.-இன் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்தவர் மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட் டிசம்பர் மாதம் 31ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த வாரம் , 47 வயதான கீதா கோபிநாத் புதிய தலைமை நிதி ஆலோசகராக பதவியேற்றுக் கொண்டார். மைசூரை பூர்விகமாகக் கொண்ட கீதா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : யார் இந்த கீதா கோபிநாத்?
ஹார்வர்ட் பல்கலைக் கழகம் இது குறித்து குறிப்பிடுகையில் “இது எங்களுக்கு கிடைத்த மாபெரும் கௌரவம்” என்று கூறியுள்ளனர். ஐ.எம்.எஃப்.இன் மேலாளர் லாகர்டே கீதா பற்றி தெரிவிக்கையில் “கீதா தனித்த அடையாளம் உடையவர். ஐ.எம்.எஃப்.-ல் இவருக்கு கிடைத்திருக்கும் தலைமைப் பண்பு மட்டுமல்லாமல், உலக பெண்கள் அனைவருக்கும் ரோல் மாடலாக கீதா இருப்பார்” என்று கூறியுள்ளார்.
அறிவுப்பூர்வமான தளமாக ஐ.எம்.எஃப். என்றும் விளங்கும். உலக நிதி அமைப்பை மாற்றும் சக்தி கொண்ட டாலர் மதிப்பு குறித்த புரிதலையும், டாலர்கள் குறைவதால் ஏற்பட இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஏனைய நாடுகளுக்கு அறிவிப்பது ஐ.எம்.எஃப்.இன் மிக முக்கிய பொறுப்பாகும் என்று கூறியுள்ளார் கீதா.
நிறைய நாடுகள், ஏற்றுமதி அனைத்தையும் டாலர்களில் ஏற்றுமதி செய்வது குறித்தும், வர்த்தகம் மற்றும் பொருட்களை டாலர்கள் மதிப்பை வாங்குவதும் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்களுக்கு கவலை அளித்து வருகிறது.
சில மாதங்களாக, சீனாவின் பொருட்களுக்கு பொருளாதார தடை விதித்து வருகிறது அமெரிக்கா. பிரிக்ஸிட் அமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது. பொதுவாகவே வர்த்தகம் தொடர்பான பாலிசிகள் குறித்து இங்கு தெளிவான நிலை நீடிப்பது இல்லை என்று கூறிய கீதா, உலக வர்த்தகம், ஏழ்மை நிலையை நீக்கியுள்ளது. வாழ்வாதாரங்களை மேம்படுத்தியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.