ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கான எங்கள் தேடலில், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம். சந்தையில் எளிதில் கிடைக்கக்கூடிய விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, சமையலறையில் காணப்படும் இயற்கையான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துமாறு பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இயற்கையாகவே தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த தொற்றுநோய் வருகிறது என்று தி ஹிமாலயா மருந்து நிறுவனத்தின் டாக்டர் ஸ்ருதி ஹெக்டே கூறுகிறார். மேலும், ஆரோக்கியமாக சாப்பிடுவது, மன அழுத்தமில்லாமல் இருப்பது, இயற்கையாகவே கிடைக்கும் மூலிகைகளின் மருத்துவ பண்புகளைப் பயன்படுத்தும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது சிறந்த வழி என்றும் கூறுகிறார்.
“மூலிகைகள் ஆக்ஸிஜனேற்ற, ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. செரிமானத்திற்கு உதவுவதோடு, அவை நச்சுத்தன்மையை நீக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது, ”என்று ஸ்ருதி கூறுகிறார்.
ஸ்ருதி ஹெக்டே ஆயுர்வேதத்தில் நன்கு அறியப்பட்ட சில மூலிகைகளை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார், அவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
குடுச்சி (எ) சீந்தில்
சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. குடுச்சி நீண்ட ஆயுளை வழங்கும், நினைவகத்தை மேம்படுத்தும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, உயிர்ச்சக்தியை ஊக்குவிக்கிறது. இரத்த வெள்ளை அணுக்களை செயல்படுத்துவதன் மூலம், மூலிகை நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கிறது. குடுச்சி பாரம்பரியமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட இருமல் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சுவாச அமைப்பில், இது சளி சவ்வை அமைதிப்படுத்துகிறது, இது ஆஸ்துமாவுக்கு எதிராக செயல்படுகிறது. இது ஒரு வலுவான செரிமான அமைப்பை மேம்படுத்துவதற்கும் செயல்படுகிறது. ஒருவர் குடுச்சி தூள் அல்லது மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் தினமும் உட்கொள்ளலாம், அவை எளிதில் கிடைக்கின்றன.
அஸ்வகந்தா
வலி மற்றும் வீக்கத்தை எளிதாக்க, தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க, மேலும் இது போன்ற சில பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த மூலிகை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா என்பது மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் ஒரு அடாப்டோஜென் ஆகும், இந்த அடாப்டோஜன் மன அழுத்தம் போன்ற நேரங்களில் உதவியாக இருக்கும். அஸ்வகந்தா அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது, இது அழற்சி மூட்டுக் கோளாறுகளை தீர்க்க உதவுகிறது. அஸ்வகந்தா காப்ஸ்யூல், தூள் அல்லது மாத்திரைகளை சூடான பால் அல்லது தண்ணீருடன் மருத்துவர் பரிந்துரைப்படி ஒருவர் உட்கொள்ளலாம்.
துளசி
துளசி இயற்கையான நோயெதிர்ப்பு மண்டல ஊக்கியாக செயல்படுவதன் மூலம் தொற்றுநோய்களை விலக்கி வைப்பதில் சிறந்ததாக உள்ளது. இது பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உதவுகிறது மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்குகிறது. ‘புனித துளசி’ என்றும் அழைக்கப்படும் துளசி ஒரு அடாப்டோஜென் ஆகும், துளசி பொதுவாக கவலை, மன அழுத்தம் மற்றும் சோர்வு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது, மேலும் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் மூலிகையாக துளசியை பயன்படுத்தப்படலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் உடல் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இதை பச்சையாக உட்கொள்ளலாம், தாவரத்திலிருந்து நேராக பறித்து, வேகவைத்து சாறு போல அல்லது ஒரு மருத்துவர் பரிந்துரைப்படி தினசரி எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக சுவாசக் குழாயின் பிரச்சினைகளுக்கு உதவியாக இருக்கும். இது கல்லீரல், இதயம், மூளை மற்றும் நுரையீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஆதரிப்பதாக அறியப்படுகிறது. நெல்லிக்காய் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள், பெக்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாக அறியப்படுகிறது. இந்த மூலிகை அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல், காஸ்ட்ரோபிராக்டிவ் மற்றும் ஆண்டிடியாபெடிக் பண்புகளுக்கு பெயர் பெற்றது. அதன் பல நன்மைகளுடன், இது உடலின் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயை பச்சையாகவோ, ஊறுகாய்களாகவோ அல்லது தண்ணீர் மற்றும் பிற சாறுகளில் கலக்கக்கூடிய ஒரு தூளாகவோ அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி காப்ஸ்யூல்கள் அல்லது மாத்திரைகளாகவோ உட்கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.