தேங்காய் பால், இஞ்சி சாறு, தேன்… ஒரு முறையாவது இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

Coconut milk making with best 4-Ingredients in tamil: தேங்காய் பால் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், எடை இழப்புக்கு உதவுவதாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது

Immunity boosting drinks in tamil: 4-Ingredient for Coconut milk Drink in tamil

immunity boosting foods in tamil: கடந்த இரண்டு ஆண்டுகளில், நாம் அனைவரும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் நம் உடலை ஆரோக்கியமாக்க பல வழிகளைக் கண்டறிந்து இருப்போம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிகள் மற்றும் அதற்கு உகந்த உணவுகள் குறித்து நமது இணைய பக்கத்தில் அன்றாட குறிப்புகளை வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவும் உணவு குறித்த சில டிப்ஸ்களை இன்று பார்க்க உள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு பானத்தை தேடுகிறீர்களானால், இந்த அற்புதான தேங்காய் பாலை நீங்கள் நிச்சயம் முயற்சிக்கலாம்.

தேங்காய் பால், தாவர அடிப்படையிலான மற்றும் இயற்கையான பால் ஆகும். இது தேங்காயின் சதையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த பாலின் அமைப்பு தடிமனாகவும், க்ரீம்மியாகவும் இருப்பதால் உங்கள் வயிற்றை எந்த நேரத்திலும் நிரப்பும். அதனுடன், இந்த தாவர அடிப்படையிலான பால் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், எடை இழப்புக்கு உதவுவதாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது.மேலும், ஆரோக்கியமான தோல் மற்றும் முடியை ஊக்குவிக்கிறது மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை உருவாக்குகிறது.

இப்படி எண்ணற்ற நன்மைகளை உள்ளடக்கியுள்ள தேங்காய் பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானத்தை எப்படி தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேங்காய் பாலின் செய்முறை:-

இதோ இந்த பானத்தை தயாரிக்க, ஒரு பிளெண்டரில் தேங்காய் பால் சேர்க்கவும். அவற்றுடன் இஞ்சி சாறு, சிறிது மிளகு மற்றும் தேன் சேர்க்கவும்.

இப்போது இந்த சுவைமிகுந்த பானத்தை அருந்தி மகிழவும்.

நீங்கள் தினமும் காலையில் இந்த பானத்தை செய்து உங்கள் விருப்பப்படி சுவைகளை சேர்த்து சுவைத்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity boosting drinks in tamil 4 ingredient for coconut milk drink in tamil

Next Story
தயிரை விட இது பெஸ்ட்… வீட்டில் சுவையான மோர் செய்முறைbuttermilk recipes in Tamil: home made butter milk simple tips in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com