Immunity boosting drinks Tamil News: கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் இந்த சூழலில் உடலுக்கு வலு சேர்க்கும் உணவுகளையும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பானங்களையும் சேர்த்துக்கொள்வது அவசியமானதாகும். அந்த வகையில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டவும், மேம்படுத்தவும் உதவுக்கூடிய வெல்லம், துளசி, சீரகம் போன்ற மூலிகை பொருட்கள் கலந்த பானத்தை அன்றாட சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெல்லத்தில் மருத்துவ குணங்கள் ஏராளமாக காணப்படுவதால் அவை சேர்க்கப்படும் பானம் யாவும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றன. அதன் படி வெல்லம் கலந்த தேநீர் வகைகளையும், அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் இங்கு காண்போம்.
இந்தியன் சாய் – வெல்லம் கலந்த மசாலா சாய் – The Indian Chai – Jaggery Masala Chai
தேவையான பொருட்கள்
ஆர்கானிக் வெல்லம் துகள்கள், பெருஞ்சீரகம் விதைகள், துளசி, சீரகம், கருப்பு மிளகு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் அசாம் சி.டி.சி தேநீர்

இந்திய தேநீர் வகைகளில் மிகவும் சுவை வாய்ந்த தேநீராக வெல்லம் கலந்த மசாலா சாய் உள்ளது. இந்த தேநீரில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகை பொருட்கள் குளிர் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவற்றிக்கு சிறந்த மருந்தாகும். இந்த மூலிகை பொருட்களை பால் கலக்காமல் வெறும் தேநீராக அருந்துவது நல்லது.
தம்பூர் ஸ்பெஷல் குர் மசாலா சாய் – Dhampure Speciality Gur Masala for Chai
தேவையான பொருட்கள்
வெல்லம், உலர்ந்த இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு கருப்பு மிளகு மற்றும் ஜாதிக்காய்

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய நம்பகத்தன்மை கொண்ட தேநீர் வகைகளில் தம்பூர் ஸ்பெஷல் குர் மசாலா சாய் உள்ளது. இதில் உள்ள மூலிகைகள் பாக்டீரியாவால் பரவும் நோய்களை அடித்து விரட்டுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறன.
கடக் சாய் மசாலாவுடன் நகர்ப்புற தட்டு வெல்லம் தூள் – Urban Platter Jaggery Powder Infused with Kadak Chai Masala
தேவையான பொருட்கள்
கடக் சாய் மசாலா கருப்பு மிளகு, வளைகுடா இலை, உலர்ந்த பெரிய ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, மெஸ், இஞ்சி, வெல்லம், நட்சத்திர சோம்பு ஏலக்காய்

இந்த மூலிகைகளால் தயாரிக்கப்படும் தேநீர், சுவையிலும் மனதிலும் அருமையாக இருக்கும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவைகளாகவே உள்ளன.
தேநீர் ட்ரோவ் வெல்லம் ஆர்கானிக் ஏலக்காய் தேநீர் – The Tea Trove Jaggery Organic Cardamom Tea
தேவையான பொருட்கள்
வெல்லம், ஏலக்காய், கருப்பு தேநீர், ரோஜா இதழ்கள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகள்.

இந்த வகை தேநீர் காஃபின் குறைந்து காணப்படும் ஒன்றாக உள்ளது. காஃபின் அதிகம் விரும்பாத நபர்கள் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் சுவை மிகுந்த ஒன்றாகவும், புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாகவும் உள்ளது.
கிர்னர் இன்ஸ்டன் பிரீமிக்ஸ் பச்சை தேயிலை – Girnar Instant Premix Calming Green Tea
தேவையான பொருட்கள்
வெல்லம், கிரீன் டீ சாறுகள், சுண்ணாம்பு சாறு தூள், துளசி, ஏலக்காய் மற்றும் இஞ்சி.

நீங்கள் கிரீன் டீ விரும்பி என்றால் இந்த வகை தேநீரை கண்டிப்பாக பருகலாம். இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த பராமரிப்பிற்கு உதவுகிறது. மேலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)