நோயெதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்ப ஆரோக்கியமான உணவை உண்ணுவதன் முக்கியத்துவத்தை கொரோனா தொற்றுநோய் நம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோயை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிரான உடலின் முதல் இயற்கை பாதுகாப்பாகும். ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி நோய்வாய்ப்படுவதற்கான முரண்பாடுகளை கணிசமாகக் குறைக்கிறது. இந்த நேரத்தில், நம்மில் பலர் நம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடற்பயிற்சி அளவை அதிகரிக்க வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் சுவையான உணவை நாம் விரும்புகிறோம், குறிப்பாக பருவமழை தொடங்கியவுடன்.
ஆனால் ஆரோக்கியமான உணவு என்பது எப்போதும் சலிப்பைக் குறிக்காது. ஆரோக்கியமான உணவுகளும் சுவையானது தான். மஞ்சள் சூப் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறந்த வழியை ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கணேரிவால் பரிந்துரைக்கிறார். இந்த ஒரு சுவையான சூப்பை சூடாக சாப்பிடுவது போல் எதுவும் இல்லை, இது எளிதானது மற்றும் சுவையாக இருக்கும் என்றும் கணேரிவால் கூறுகிறார்.
மருத்துவ மதிப்புகளால் பொக்கிஷமாக கருதப்படும் மஞ்சள், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், நீங்கள் சமீபத்தில் தடுப்பூசி போட்டிருந்தாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க இந்த சூப்பை நீங்கள் குடிக்கலாம்.
“நீங்கள் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்து, அவை குணப்படுத்தும், மேலும் அவை உங்கள் உணவில் ஒரு சுவையான கூடுதலாக இருக்கும்” என்று கணேரிவால் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
மஞ்சள் சூப் செய்யும் எளிதான செய்முறை இதோ…
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி – நெய்
1 – வெங்காயம், துண்டுகளாக்கப்பட்டது
1 தேக்கரண்டி – பூண்டு, நறுக்கியது
2 அங்குல துண்டு – மஞ்சள், அரைத்தது
1 ½ தேக்கரண்டி – இஞ்சி, அரைத்தது
3 – கேரட், துண்டுகளாக்கப்பட்டது
4 கப் – காய்கறிகள்
1 – எலுமிச்சை துண்டு
செய்முறை
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* துண்டு துண்டுடாக வெட்டப்பட்ட பூண்டு, அரைத்த புதிய மஞ்சள், இஞ்சி, ஆகியவற்றை இதனோடு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* இதில் கேரட் சேர்த்து மீண்டும் வதக்கவும். அடுத்து, காய்கறிகளை சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
* ஒரு பிளெண்டரின் உதவியுடன் அல்லது ஒரு கரண்டியால், சூப்பை நன்றாக கலக்க வேண்டும். கேரட் நன்றாக வேகவைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் இதில், சிறிது எலுமிச்சை பிழிந்து சூடாக பரிமாறுங்கள்.
இந்த செய்முறை இத்தனை எளிதானது, இல்லையா?
மாலையில் (மாலை 4-5 மணியளவில்) இந்த சூப்பை சாப்பிடுங்கள் அல்லது இரவு உணவிற்கு முந்தைய உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், என்று கணேரிவால் பரிந்துரைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil