scorecardresearch

மஞ்சள்-எலுமிச்சை நீர்… இம்யூனிட்டியை அதிகரிக்கும் எளிய வழி இதோ…

Immunity booster: Turmeric lemon water to ‘make your system happy’: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பானம்; மஞ்சள் எலுமிச்சை நீர், ரெசிபி இதோ…

மஞ்சள்-எலுமிச்சை நீர்… இம்யூனிட்டியை அதிகரிக்கும் எளிய வழி இதோ…

இந்த தொற்றுநோய் ஒவ்வொருவரும் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சமையலறை மசாலாப் பொருள்களைச் சேர்ப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை மாற்றுவது போன்றவற்றை செய்யலாம்.

சமையற்கலை நிபுணர் சரண்ஷ் கோயிலா சமீபத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செய்முறை ஒன்றை பகிர்ந்து கொண்டார். அது மஞ்சள் எலுமிச்சை பானமானகும். இந்த எளிய பானம் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. இது சுவையானதும் கூட.

கோயிலாவின் கூற்றுப்படி, இதுபோன்ற பானங்களை குடிப்பது கடினம் என்று நினைக்கும் அனைவருக்கும், இந்த புதிய மஞ்சள் எலுமிச்சை பானம் புதிய சுவையில் மகிழ்ச்சியான உணர்வைத் தரும்.

“மஞ்சளின் லேசான கசப்பை எலுமிச்சை மற்றும் தேனுடன் சமப்படுத்தவும். மஞ்சள் வெப்பத்தை உற்பத்தி செய்யும் போது கருப்பு மிளகு குளிர்ச்சியாக வைக்கிறது. மேலும், மஞ்சளின் அனைத்து நன்மைகளையும் உறிஞ்ச உதவுகிறது. நீங்கள் இந்த பானத்தை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தும் பருகலாம், ”என்று கோயிலா விவரித்தார்.

மஞ்சள் எலுமிச்சை பானத்தை எப்படி செய்வது?

* உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நீங்கள் இதை இனிமையாகவோ அல்லது டேன்ஜியராகவோ செய்யலாம், மேலும் புதிய மஞ்சள் மிகவும் வலுவாக இருந்தால், நீங்கள் மஞ்சளின் அளவைக் குறைக்கலாம், ”என்று கோயிலா குறிப்பிட்டார்.

* நீங்கள் எலுமிச்சைக்கு பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

2 சிறிய புதிய மஞ்சள் வேர்கள், நறுக்கப்பட்டவை

1 தேக்கரண்டி – இஞ்சி

1 தேக்கரண்டி – வறுத்த சீரகம்

1 தேக்கரண்டி – கருப்பு உப்பு

2 தேக்கரண்டி – கருப்பு மிளகு

4 டீஸ்பூன் – தேன்

2 தேக்கரண்டி – இளஞ்சிவப்பு உப்பு

4 – எலுமிச்சை (சாறு)

செய்முறை

அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். நன்றாக பேஸ்ட்டாக இருக்குமாறு அரைக்க வேண்டும்.

அரைத்த பின் 90 மில்லி பேஸ்ட்டுக்கு, 150 மில்லி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

இப்போது எளிமையான சத்தான பானம் ரெடி! சுவைத்து மகிழுங்கள்.

இதன் சுவை எப்படி?

இதன் சுவை மிகவும் வித்தியாசமானது, என்றார் கோய்லா. “நீங்கள் இஞ்சி போன்ற காரமான சுவைகளை விரும்பினால், இது உங்களுக்கு பிடிக்கும். எனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நான் இதை தினமும் குடிக்கிறேன், ”என்று கோய்லா குறிப்பிட்டுள்ளார்.

நீங்களும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பானத்தை பருகுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Immunity fresh turmeric lemon water easy recipe saransh goila