கிராம்பு, எலுமிச்சை, கருவேப்பிலை… ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் கிச்சன் சீக்ரெட்ஸ்!

Immunity oxygen booster foods for corona prevention: கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் இதயம், நரம்பு மண்டலம், சிறுநீரக பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. உடலின் ஆக்ஸிஜன் அதிகரிக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்று பாதிப்பிலிருந்து தவிர்க்கவும், தொற்று பாதித்தவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொரோனாவின் இரண்டாவது அலையில், தொற்று பாதித்தவர்களுக்கு கடுமையான மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளோடு, ஆக்ஸிஜனை அதிகரிக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளை தற்போது பார்ப்போம்.

கிராம்பு

கிராம்புக்கு நம் உடலில் ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் தன்மை அதிகம் என்பதால், நம் உடலில் ஆக்ஸிஜன் அதிகரிப்பை உறுதி செய்கிறது. தினசரி உணவுகளில் சிறிதளவு கிராம்பு சேர்த்துக் கொள்வது உங்கள் உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் செயலை உறுதிப்படுத்தும்.

எலுமிச்சை

நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி எலுமிச்சையில் அதிகமாக உள்ளது. மேலும் அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எலுமிச்சையை வெட்டி சூடான நீரில் கொதிக்க வைத்து குடிக்க உங்கள் இம்யூனிட்டியோடு ஆக்ஸிஜனும் அதிகரிக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் இதயம், நரம்பு மண்டலம், சிறுநீரக பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. உடலின் ஆக்ஸிஜன் அதிகரிக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.

துளசி

துளசி வலுவான வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தினமும் 10 துளசி இலைகளைச் சாப்பிட்டு வர உங்கள் உடலின் ஆக்ஸிஜன் அதிகரிப்பை உறுதி செய்யலாம்.

மஞ்சள் பால்

மஞ்சள் வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது பருவகால நோய்த்தொற்றுகள் அல்லது காய்ச்சல்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியோடு, ஆக்ஸிஜனை அதிகரிக்க உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது நல்லது. மஞ்சளுடன், மிளகு மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

கீரை

கீரைகளில் வைட்டமின் சி மட்டுமல்லாமல், ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பீட்டா கரோட்டினும் நிரம்பியுள்ளது, இவை நமது நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி நோய்க் கிருமிக்கு எதிராக போராட உதவுகிறது.

இவை தவிர நாம் தினசரி உணவுகளில் பயன்படுத்தும் பூண்டு, இஞ்சி, சோம்பு மற்றும் சீரகம் நம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.

மேலும், தர்பூசணி, வேர்க்கடலை, அன்னாசிப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்வது, உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும்.

பட்டாணி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பருப்புவகைகளும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளாகும். இவற்றையும் ஆக்ஸிஜனை அதிகரிக்க எடுத்துக் கொள்ளலாம். மேலும் இவற்றிலுள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்புக்கு உதவக் கூடியவை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity oxygen booster foods for corona virus prevention

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com