Advertisment

சூப்பரான சுவையான டாப்-5 உணவுகள்: நோய் எதிர்ப்பை அதிகரிக்க இவை அவசியமுங்க!

Immunity Boosting Food: கிரீன் டீ உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ஒரு கப் சூடான கீரீன் டீயை காலையில் குடித்தால் அது நமக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Immunity, super foods, green foods, helathy life,, nutritional diet, lifestyle, Suprefoods, immunity boosting foods, indian superfoods, health, immunity-boosting foodsindianexpress.com, indianexpress, amla, honey benefits, amla benefits, turmeric benefits, green tea benefits, spirulina benefits

immunity to face coronavirus immunity boosting foods amla green tea turmeric honey tamil news- கொரோனா வைரஸ், கோவிட் 19, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், தேன், நெல்லிக்காய், மஞ்சள், கிரீன் டீ

Immunity To Face Coronavirus: நோய்வாய்ப்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் அதற்கு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது, குடிப்பதை குறைத்துக் கொள்வது போன்றவற்றை செய்வதால் ஒருவர் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்க முடியும். ஆனால் இதனுடன் நமது திட்ட உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சரியான உணவை உண்பது பாதி வேலையை முடிக்கிறது. ஆனால், உங்களை ஆரோக்கியமாக வைக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும், என ’Gaia’ வின் நிறுவன இயக்குனர் Dolly Kumar ஆலோசனை கூறுகிறார். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க நீங்கள் உண்ண வேண்டிய 5 சூப்பர் உணவுகள் பற்றி பரிந்துரைக்கிறார்.

 

immunity to face coronavirus immunity boosting foods amla green tea turmeric honey tamil news- கொரோனா வைரஸ், கோவிட் 19, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், தேன், நெல்லிக்காய், மஞ்சள், கிரீன் டீ Immunity Boosting Food: நெல்லிக்காய்

1. நெல்லிக்காய்

இந்திய வீடுகளில் ஊறுகாய் செய்வதற்காக பல காலங்களாக இது பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், தொண்டை வலி, செரிமான கோளாறுகள் போன்ற பொதுவான பிரச்சனைகளை விரட்டுவதற்காக இது நன்கு அறியப்பட்டதாகும். Antioxidants மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற வல்லதான நெல்லிக்காய், கண் பார்வை, முடி வளர்ச்சி, இருதயம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கு நல்லது. நெல்லிக்காயில் அதிக நார்ச்சத்து உள்ளதால் இது உடல் எடையை குறைக்கவும் நல்லது. நெல்லிக்காயை பச்சையாகவோ அல்லது சாறு எடுத்தோ சாப்பிடலாம்.

 

immunity to face coronavirus immunity boosting foods amla green tea turmeric honey tamil news- கொரோனா வைரஸ், கோவிட் 19, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், தேன், நெல்லிக்காய், மஞ்சள், கிரீன் டீ Immunity Boosting Food: தேன்

2. தேன்

இயற்கையான தேனில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் மிகுதியாக உள்ளது. இயற்கையான தேனில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. தேனில் அதிகமாக உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டையை இதமாக்கி, உடலை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் குடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தேனில் உள்ள fructose மற்றும் glucose இணைந்து நீடித்த ஊக்கத்தை அளிப்பதால் இது ஆற்றல் அதிகரிக்கும் உணவாகும். செரிமான கோளாறுகளை சரிச்செய்யவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது.

 

immunity to face coronavirus immunity boosting foods amla green tea turmeric honey tamil news- கொரோனா வைரஸ், கோவிட் 19, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், தேன், நெல்லிக்காய், மஞ்சள், கிரீன் டீ Immunity Boosting Food: கிரீன் டீ

3. கிரீன் டீ

கிரீன் டீயை தவறாமல் குடிப்பதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும். மேலும் இதில் அதிக அளவு antioxidants உள்ளது. கிரீன் டீயில் உள்ள polyphenols மற்றும் catechins இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நம்மில் பெரும்பாலோர் பால் கலந்த தேநீர் குடிப்பதற்கு பழகியிருக்கும் சூழலில் பச்சை தேயிலையின் சுவை கசப்பாக இருக்கும் என்றாலும், ஒருவர் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான பானங்களில் இதுவும் ஒன்றாகும். இது தவிர கிரீன் டீ உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ஒரு கப் சூடான கீரீன் டீயை காலையில் குடித்தால் அது நமக்கு புத்துணர்ச்சியைத் தரும். நமது உடலை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு கிரீன் டீயில் நமது தோலை பளபளக்க செய்ய தேவையான ஊட்டசத்துக்களும் மிகுதியாக உள்ளன.

 

immunity to face coronavirus immunity boosting foods amla green tea turmeric honey tamil news- கொரோனா வைரஸ், கோவிட் 19, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், தேன், நெல்லிக்காய், மஞ்சள், கிரீன் டீ Immunity Boosting Food: ஸ்பிருலினா

4. ஸ்பிருலினா (Spirulina)

ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின்களும் antioxidants மிக முக்கியம் என்பது போல புரதங்களும் கொழுப்பு அமிலங்களும் கூட சமமாக முக்கியம். இயற்கையாகவே புரதங்களும் கொழுப்பு அமிலங்களும் அதிக அளவில் இருக்கக்கூடியது ஸ்பிருலினா காப்ஸ்யூல்கள். வைட்டமின்கள் மற்றும் தாதுக்களோடு உங்கள் கண் பார்வையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும். மேலும் ஸ்பிருலினா காப்ஸ்யூல்கள் ரத்த அழுத்த அளவை குறைக்கவும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை ஆரோக்கியமாக பராமரிக்கவும் செய்கிறது.

 

immunity to face coronavirus immunity boosting foods amla green tea turmeric honey tamil news- கொரோனா வைரஸ், கோவிட் 19, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், தேன், நெல்லிக்காய், மஞ்சள், கிரீன் டீ Immunity Boosting Food: மஞ்சள்

5. மஞ்சள்

இந்திய வீடுகளில் பொதுவாக இருக்கக்கூடிய ஒன்றான மஞ்சள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிப்புடையதாக கருதப்படுகிறது. மஞ்சளில் அதிகளவு காணப்படும் குர்குமின் (curcumin) உள்ளடக்கம் அழற்ச்சி எதிர்ப்பு மூலப் பொருளாகும். மஞ்சளின் குணப்படுத்தும் பண்புகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உண்பதோடு மறக்காமல் சீரான உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியத்துக்கு அதிக அளவு நீரை பருகுவதோடு தேவையான தூக்கமும் வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Lifestyle Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment