ஆசனவாய் சீழ்கட்டி... இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கு: விளக்கும் டாக்டர் பூபதி ஜான்
ஆசனவாயில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மிகவும் வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும். குறிப்பாக, ஆசனவாய் சீழ்கட்டி ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன் அபாயம் குறித்து மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார்.
ஆசனவாயில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மிகவும் வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும். குறிப்பாக, ஆசனவாய் சீழ்கட்டி ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன் அபாயம் குறித்து மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் நிறைய பேருக்கு ஆசனவாய் சீழ்கட்டி பாதிப்பு இருப்பதாக மருத்துவர் பூபதி ஜான் குறிப்பிட்டுள்ளார். ஆசனவாய் சீழ்கட்டி ஏற்பட்டால், அதனை வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று அவர் கூறுகிறார். அவ்வாறு செய்தால் பிரச்சனை தீவிரமாகி பௌத்திரம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisment
மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு ஆசனவாய் சீழ்கட்டி வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஏனெனில், மலம் இறுக்கமாக வெளியேறும் போது ஆசனவாயில் வெடிப்பு விழுந்து கட்டி உருவாகும் என்று மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார். இரத்தத்தில் ஏதேனும் தொற்று இருந்தாலும், அவை ஆசனவாயில் சீழ்கட்டியை உருவாக்கக் கூடும்.
இது தவிர நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் வெயிலில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கும் ஆசனவாய் சீழ்கட்டி உருவாகும். இது போன்ற சில காரணங்களால் ஆசனவாயில் கட்டி ஏற்படுகிறது என்று மருத்துவர் பூபதி ஜான் கூறுகிறார்.
ஆசனவாய் சீழ்கட்டி முதலில் வெளியே தெரியாது. வீக்கம் அல்லது வலி இருப்பதை போன்ற உணர்வு தான் தெரியும். இதன் தொடர்ச்சியாக, மாலை நேரத்தில் காய்ச்சல் வரத் தொடங்கும். மலம் கழிப்பது, நடப்பது மற்றும் நாற்காலியில் அமர்வதற்கு சிரமமாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் ஆசனவாய் சீழ்கட்டி பாதிப்பாக இருக்கக் கூடும் என்று மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
உடலில் மற்ற இடங்களில் சீழ்கட்டி வந்தால் அதனை எளிதாக குணப்படுத்தி விடலாம். ஆனால், ஆசனவாயில் சீழ்கட்டி வந்தால் அதனை குணப்படுத்துவது கடினமாக இருக்கும். ஏனெனில், இவை மீண்டும், மீண்டும் வரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஆசனவாயை சுற்றிலும் வலி இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சை அளித்தால் 100 சதவீதம் இந்த பாதிப்பில் இருந்து வெளியே வரலாம் என்று மருத்துவர் பூபதி ஜான் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Dr Boopathy John Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.