லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது நோயாளி அதிக காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தத்துடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது, உடனடியாக பிராட்-ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், மருந்துகள் வேலை செய்யவில்லை, அவரது நிலை மேலும் சிக்கலாக்கியது. ரத்தத்தில் பின்னர் டிரக் ரெசிஸ்டென்ட் கிளெப்சில்லா நோய்த்தொற்று (drug-resistant Klebsiella infection) இருப்பது கண்டறியப்பட்டது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர மருந்துகளின் கலவை தேவைப்பட்டது.
ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் (AMR) காரணமாக நோயாளியின் நிலை மோசமடைந்தது. இது பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக முன்பு பயனுள்ளதாக இருந்த மருந்துகளை எதிர்க்கும் நிலை, என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அப்துல் கஃபூர் கூறினார்.
அதிகப்படியான அல்லது தவறான ஆன்டிபயாடிக்ஸ் பயன்பாடு இந்தியர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது, 2019 இல் நாட்டில் நிகழ்ந்த 29.9 லட்சம் செப்சிஸ் இறப்புகளில் 60 சதவீதம் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்டதாக சமீபத்திய லான்செட் ஆய்வு காட்டுகிறது. இதில், அந்த ஆண்டு கிட்டத்தட்ட 10.4 லட்சம் செப்சிஸ் இறப்புகள் (33.4 சதவீதம்) ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (AMR) உடன் இணைக்கப்பட்டன, 2.9 லட்சம் செப்சிஸ் இறப்புகள் நேரடியாகக் காரணமாக இருந்தன.
ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு பாக்டீரியா தொற்றுக்கு ஆபத்தான எதிர்வினையைக் கொண்டிருக்கும் போது செப்சிஸ் இறப்புகள் நிகழ்கின்றன, மேலும் சிகிச்சையின்றி, உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம்.
ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (AMR) நிலை என்ன?
AMR என்பது நோயாளியின் வாழ்நாளில் அதிகமாக அல்லது தவறான ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்தியதன் விளைவாகும், இந்தியாவில் drug-resistant bacteria விகிதம் அதிகரித்து வருவதால், சிகிச்சை விருப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்டு பொது சுகாதார சவாலாக உள்ளது, என்று டாக்டர் கஃபூர் கூறினார்.
அடுத்த 25 ஆண்டுகளில் உலகெங்கிலும் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆண்டிபயாடிக்- ரெசிஸ்டன்ஸ் நோய்த்தொற்றுகளால் இறக்கக்கூடும் என்று லான்செட் கணித்ததன் மூலம் வரும் தசாப்தங்களில் AMR மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (GRAM) திட்டத்தின் உலகளாவிய ஆராய்ச்சியின் புதிய ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை, ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸின் முதல் உலகளாவிய பகுப்பாய்வு ஆகும்.
காலப்போக்கில் AMR இறப்புகளின் போக்குகள் எவ்வாறு மாறிவிட்டன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் எதிர்காலத்தில் அவை எவ்வாறு மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வது, உயிர்களைக் காப்பாற்ற உதவுவதற்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு இன்றியமையாதது, என்று ஆய்வு ஆசிரியர் டாக்டர் மொஹ்சென் நாகவி கூறினார். (Team Leader of the AMR Research Team at the Institute of Health Metrics (IHME), University of Washington, USA)
இந்தியா உட்பட 204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அனைத்து வயதினரிடையேயும் 22 நோய்க்கிருமிகள் (pathogens), 84 pathogen-drug combinations மற்றும் 11 தொற்று நோய்க்குறிகள் (மூளைக்காய்ச்சல், ரத்த ஓட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகள் உட்பட) இருந்து ஆய்வுக்கான மதிப்பீடுகள் வந்துள்ளன.
இந்தியாவிற்கு ஏன் ஆய்வு பொருத்தமானது?
இந்தியாவில் உள்ள மூன்று பொதுவான எதிர்ப்பு நோய்க்கிருமிகள் (pathogens) ஈ.கோலி, இது குடல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்; க்ளெப்சில்லா நிமோனியா, நிமோனியா மற்றும் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும்; மற்றும் Acinetobacter baumannii, இது முக்கியமாக மருத்துவமனை நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையது.
மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துக் கடைகளில் கண்மூடித்தனமாக ஆன்டிபயாடிக்ஸ் வாங்கி பயன்படுத்துவதால் AMR ஏற்படுகிறது. பலர் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவைப் பின்பற்றுவதில்லை, அவற்றை பாதியிலேயே கைவிடுகின்றனர்.
ஆண்டிபயாடிக் பயன்பாட்டிற்கு, ஆண்டிபயாடிக் தேவையா என்பதை தீர்மானித்தல் மற்றும் பொருத்தமான ஆண்டிபயாடிக் கண்டறிதல் போன்ற முடிவெடுப்பதற்கு வழிகாட்டுவதற்கு போதுமான ஆய்வக உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய கண்டறியும் வசதிகளுக்கான அணுகல் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.
மீன்வளர்ப்பு போன்ற சில தொழில்களில், உற்பத்தி இழப்புகளைச் சேமிக்க ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படுகின்றன, எனவே அவை உணவு மூலம் உங்கள் உடலுக்குள் நுழைகின்றன.
RESISTANT BUGS என்றால் என்ன?
லான்செட் ஆய்வின்படி, குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் மார்பில் உள்ள நோய்த்தொற்றுகள் இந்தியாவில் செப்சிஸ் இறப்புகளில் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு காரணமாகின்றன. மொத்தத்தில் சுமார் 27 சதவீதம்.
2019 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் செப்சிஸ் காரணமாக இறந்த ஐந்து லட்சம் பேரில், 3.25 லட்சம் குழந்தைகள் பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உள்ள கொடிய பாக்டீரியா தொற்று ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா ஆகும்.
methicillin-resistant S. aureus (MRSA) காரணமாக ஏற்படும் இறப்புகள் உலகளவில் மிக அதிகமாக அதிகரித்துள்ளன, இது 2021 இல் 130,000 இறப்புகளுக்கு நேரடியாக வழிவகுத்தது – இது 1990 இல் 57,200 இறப்புகளை விட இரண்டு மடங்கு அதிகம்.
இந்தியாவில், aminopenicillin-resistant E.coli. என்ற the drug-bug combination அதிக ஆபத்தான அபாயத்தைக் கொண்டுள்ளது. குறைந்தது 6.8 லட்சம் இறப்புகள் ஆறு முன்னனி drug-resistant நோய்க்கிருமிகளுடன் தொடர்புடையவை.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளாலும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நோய்த்தொற்றுகள் (HAIs) பற்றிய கட்டாய பொது அறிக்கையுடன், தொற்றுக் கட்டுப்பாட்டுக்கான வலுவான மற்றும் செயல்படுத்தக்கூடிய கட்டமைப்பானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு முக்கியமானது. புதிய ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் விரைவான நோயறிதல் ஆகியவற்றில் முதலீடு செய்வதும் செப்சிஸ் மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது அவசியம், என்று டாக்டர் கஃபூர் கூறினார்.
AMR இன் திட்ட அதிகாரியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் காமினி வாலியா, ஆய்வக உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் ஏற்கனவே முதலீடு செய்து வருவதாகவும், இப்போது மாவட்ட மருத்துவமனைகளில் வசதிகளை வழங்குவது கட்டாயமாகும் என்றார்.
Read in English: Lancet alert on popping antibiotics: One-third of India’s 30 lakh sepsis deaths linked to antimicrobial resistance
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.