அதிநவீன வசதிகளுடன் பயணிகள் ஓய்வு அறை – அசரடிக்கும் திருச்சி ரயில் நிலையம்

IRCTC: இந்திய ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையம் இப்போது நவீனமாகியுள்ளது. பயணிகளுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே பல வசதிகளை திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேம்படுத்தியுள்ளது. தென்னக ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் இந்த ரயில் நிலையத்தில்…

By: July 12, 2020, 7:41:08 AM

IRCTC: இந்திய ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையம் இப்போது நவீனமாகியுள்ளது. பயணிகளுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே பல வசதிகளை திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேம்படுத்தியுள்ளது. தென்னக ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடை புதுப்பிக்கப்பட்டுள்ளது, பயணிகள் நடந்து செல்லும் பாதையில் கூரை வேயப்பட்டுள்ளது, அணுக சாலைகள் போடப்பட்டுள்ளது மேலும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (IRCTC) பயணிகள் ஓய்வறை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது, என ரயில்வே அமைச்சரகம் தெரிவித்துள்ளது. கோவிட் -19 தொற்றுக் காரணமாக இந்த ஓய்வறைக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என ஐஆர்சிடிசி வலைதளம் குறிப்பிடுகிறது. எனினும் இந்த திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில் உள்ள பல்வேறு வசதிகளை புகைபடங்கள் மூலம் நீங்கள் காணலாம்.

பயணிகள் ஓய்வறை நன்றாக வடிவமைக்கப்பட்டு, சிறப்பாக ஒளியமைப்பு செய்யப்பட்டு, முழுவதுமாக குளிரூட்டப்பட்டுள்ளது.

கொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க!

சுற்றுலா பயணிகள் அல்லது பயணிகள் குளிரூட்டப்பட்ட அறை அல்லது குளிரூட்டப்பட்ட டார்மிட்டரிகளை (Dormitories) தேர்வு செய்யலாம்.

தரமான படுக்கைகள் மற்றும் படுக்கை விரிப்புக்கள் வழங்கப்படுகிறது.

அறைகளில், பயணிகளின் பைகள் மற்றும் இதர சாமான்களை வைப்பதற்காக அலமாரி, பூட்டும் வசதி கொண்ட லாக்கர் ஆகியவை உள்ளது.

நன்றாக பயிற்சி பெற்ற தொழில்முறை விதிமுறைகளை நன்கு அறிந்த தொழில்முறை உதவியாளர்கள் (professional attendants) பயணிகளுக்கு அறை சேவை (room service) செய்ய அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஓய்வறையிலும் LED தொலைகாட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

குளியலறைகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் WC, Geysers, Showers போன்ற அனைத்து நவீன வசதிகளும் குளியலறைகளில் உள்ளன.

அறைகள் மற்றும் டார்மெட்டரிகளில் தொலைபேசி inter-com வசதி உள்ளது.

உணவு மற்றும் பானங்கள் (F&B) அறை சேவை அழைப்பில் கிடைக்கிறது.

அருந்துவதற்கு உகந்த குடிநீர், WiFi வசதியும் கிடைக்கிறது.

கொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க!

ஒவ்வொரு அறையிலும் மின்னணு தேனீர் kettle உடன் தேனீர் மற்றும் காபி செய்வதற்கான பொருட்களும் கொடுக்கப்படுகிறது.

சோபா மற்றும் புல்வெளியுடன் சூட் (Suite) அறையும் கிடைக்கிறது.

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறை வசதியில், 9 குளிரூட்டப்பட்ட டீலக்ஸ் அறைகள் (2 pax), 2 குளிரூட்டப்பட்ட சூப்பர் டீலக்ஸ் அறைகள் (2 pax), ஒரு குளிரூட்டப்பட்ட சூட் அறை (2 pax), 5 குளிரூட்டப்பட்ட சூட் குடும்ப அறைகள் (3 pax), ஒரு குளிரூட்டப்பட்ட டீலக்ஸ் குடும்ப அறை (5 pax) ஆகியவை உள்ளன. குளிரூட்டப்பட்ட டீலக்ஸ் இருவர் தங்கும் அறை 12 மணி நேரத்திற்கு ரூபாய் 1,500/- என்ற கட்டணத்திலும், 24 மணி நேரத்திற்கு ரூபாய் 2,400/- என்ற கட்டணத்திலும் கிடைக்கிறது. அதே போல் குளிரூட்டப்பட்ட Cabin (Dormitory) 12 மணி நேரத்திற்கு ரூபாய் 600/- க்கும் 24 மணி நேரத்திற்கு ரூபாய் 980/- க்கும் கிடைக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Indian railways tiruchirap0palli junction station offers state of the art irctc retiring rooms

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X