கொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க!

Weight Loss by guava leaves tea: உங்கள் நரம்புகளையும் மனதையும் அமைதிப்படுத்தி, கொய்யா இலை தேனீர் நல்ல உறக்கத்தையும் தருகிறது.

By: July 10, 2020, 7:36:45 AM

Weight Loss Tamil News: இந்த நோய் தொற்று காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக் கூடாது? என்ன குடிக்க வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகள் படித்திருப்பீர்கள். ஆனால் கொய்யா மர இலைகள் ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மிகவும் நன்மை பயக்கும் என உங்களுக்கு தெரியுமா ? அதுமட்டுமல்ல அதை ஒரு அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம்.

சுவை மிகுந்த கொய்யா பழம் பல அவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த பழம். அதே போல் கொய்யா மரத்தின் இலைகளிலும் பல ஆரோக்கிய பண்புகள் உள்ளன. கொய்யா இலைகளை கொண்டு தேனீர் காய்ச்சலாம்.

Weight Loss by guava leaves tea: உடல் எடை குறைய கொய்யா இலை தேநீர்

மெக்சிக்கோ மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் கொய்யா இலை ஒரு பாரம்பரிய மருந்தாக பல ஆண்டுகளாக இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேனீரை தயாரிக்க சிறிய அளவு நீரை கொதிக்க வைத்து அதில் சில கொய்யா இலைகளை போட்டு நன்றாக கொதித்ததும் அதை வடிக்கட்டி குடிக்கலாம்.

கொய்யா இலை தேனீர் குடிப்பதால் வயிற்றுப் போக்கால் அவதிபடுபவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இது வயிற்று பிடிப்பைத் தணிக்கும். மேலும் சீக்கிரம் நிவாரணத்தை கொடுக்கும். மேலும் திரவ நிலையில் உள்ள இதை வாய் வழியாக உட்கொள்வதால் இது உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்தை தக்கவைக்கிறது.

கொய்யா இலை தேனீர் உடல் எடை குறைப்பதையும் ஊக்குவிக்கிறது. கொய்யா இலையில் வைட்டமின் சி, இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. எனவே உங்களுக்கு குறைவான காய்ச்சல் இருந்தால் இந்த தேனீரை குடியுங்கள். இது தொண்டை, சுவாச பாதை மற்றும் நுரையீரலில் உள்ள சளியை போக்கும்.

மேலும் உங்கள் சருமத்தில் உள்ள முக பரு, வடுக்கள் ஆகியவற்றை போக்குவதற்கும் இந்த கொய்யா இலை சிறந்தது. இதற்கு கொய்யா இலைகளை நசுக்கி அதை பரு மற்றும் வடுக்கள் உள்ள பகுதிகளில் தடவி பாருங்கள். வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.

தலை முடி அடர்த்தி குறைவு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிபடுபவர்களும் கொய்யா இலையை பயன்படுத்தலாம். கொய்யா இலைகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிக்கட்டி பொருக்கும் சூட்டில் தலையில் மசாஜ் செய்யலாம்.

உங்கள் நரம்புகளையும் மனதையும் அமைதிப்படுத்தி, கொய்யா இலை தேனீர் நல்ல உறக்கத்தையும் தருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Weight loss tamil news weight loss by guava leaves tea koyya ilai benefits

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X