Advertisment

வாவ்... கொரோனாவை ஒழிக்கும் வேப்ப மரச் சாறு: இந்திய ஆய்வு முடிவு அறிவிப்பு

வேப்ப மர பட்டைச் சாறு கொரோனா வைரஸை அழிப்பதாக இந்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

author-image
WebDesk
New Update
வாவ்... கொரோனாவை ஒழிக்கும் வேப்ப மரச் சாறு: இந்திய ஆய்வு முடிவு அறிவிப்பு

Indian research finds Neem tree based drugs may fight against corona: வேப்பமர பட்டைச் சாறு கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

Advertisment

கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை அழிக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தற்போது கொரோனா வைரஸூக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கொரோனா வைரஸ் பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள் குறித்தும் உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்தியாவிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படியான ஒரு ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐஐஎஸ்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர்.

இவர்களின் ஆராய்ச்சியை தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு,

இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள வேப்ப மரம், ஒட்டுண்ணி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்திக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்ப மரத்தின் பட்டை சாறு, மலேரியா, வயிறு மற்றும் குடல்புண்கள், தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி உள்ளது.

தற்போதைய ஆராய்ச்சி, வேப்ப மரப்பட்டையின் கூறுகள், பரவலான வைரஸ் புரதங்களை குறிவைக்கும் என தெரிய வந்துள்ளது. இது SARS-CoV-2 உள்ளிட்ட வளர்ந்து வரும் கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகளுக்கு எதிராக வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படுகிற திறனைக் காட்டுகிறது.

வேப்ப மர பட்டை சாறினை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் அதை விலங்கு மாதிரிகளில் சோதனை செய்து அதில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிவைரல் பண்புகள் இருப்பதைக் காட்டியது. வேப்ப மரப்பட்டை சாறு பல்வேறு இடங்களில் உள்ள கொரோனா வைரசின் பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு, வைரஸ் நுழைவை தடுக்கிறது.

இதையும் படியுங்கள்: வீட்டுல பப்பாளி மரம் இருக்கா? சுகர் பிரச்னைக்கு இதை ட்ரை பண்ணுங்க!

கணினி மாடலிங் மூலம், வேப்ப மரப்பட்டை சாறு SARS-CoV-2 ஸ்பைக் புரதத்துடன் பல்வேறு இடங்களில் பிணைக்கப்பட்டு, ஹோஸ்ட் செல்களுக்கு வைரஸ் நுழைவதைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புகள் வைராலஜி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

"கொரோனா வைரஸால் யாராவது பாதிக்கப்படும்போது கடுமையான நோய் அபாயத்தைக் குறைக்கும் வேம்பு அடிப்படையிலான மருந்தை உருவாக்குவதே இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள்" என்று பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் கண் மருத்துவத் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியரான ஆய்வு இணை ஆசிரியர் மரியா நாகல் கூறினார்.

"புதிய SARS-CoV-2 மாறுபாடு வெளிப்படும் ஒவ்வொரு முறையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய சிகிச்சைமுறைகளை உருவாக்க வேண்டியதில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

தொண்டை அழற்சிக்கு பென்சிலினை எப்படி எடுத்துக்கொள்கிறோமோ, அதுபோலவே கோவிட் நோய்க்கு வேம்பு அடிப்படையிலான மருந்தை உட்கொள்வதை நாங்கள் கற்பனை செய்து கொண்டு, மருத்துவமனை மற்றும் மரணம் குறித்த அச்சமின்றி நமது இயல்பு வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கிறது,” என்று நாகல் கூறினார்.

தற்போதைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வைரஸ் தடுப்பு சிகிச்சை முயற்சிகளுக்கு இந்த ஆராய்ச்சி வழிகாட்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர், அதே நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வாக்குறுதியையும் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Corona Virus Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment