Instant chapati in tamil: சமீப காலமாக தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக ‘சப்பாத்தி’ வலம் வருகிறது. இதற்கு காரணம் இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான் என்றால் நிச்சயம் மிகையாகாது. சப்பாத்தியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்கவும் இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கோதுமை மாவினால் தயார் செய்யப்படும் இந்த சப்பாத்தி செய்ய நமக்கு பல வழிகள் உள்ளன. மேலும், சாஃபட்டான மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்தியை தயார் செய்ய ஒரு சிறந்த வழியும் உள்ளது. இந்த சிறந்த வழிகளுள் ஒன்று தான் பிரஷர் குக்கரில் சப்பாத்தியை தயார் செய்வது. அந்த வகையில், இந்த வீடியோவில் ஒருவர் பிரஷர் குக்கரில் வெறும் 2 நிமிடத்தில் 3 சப்பாத்திகளை தயார் செய்து நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறார்

தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மூன்று சப்பாத்திகள் உருட்டப்பட்டு, பின்னர் அவை பிரஷர் குக்கருக்குள் வைக்கப்படுகின்றன. பிறகு இரண்டு நிமிடங்கள் மூடியால் மூடப்பட்டு உள்ளன. அதன்பிறகு திறந்து பார்த்தால், அதனுள்ளே சப்பாத்திகள் தயாராக இருக்கின்றன.
சமையல் ஹேக்:-
இப்படி தயார் செய்வது குறித்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டாலும், மற்றவர்கள் ‘ஹேக்’ வேலை செய்யாது என்று கூறுகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்ற பல ஹேக்குகள் வைரலாகியுள்ளன. உதாரணமாக, பிரபல சமையல் வல்லுநர் விகாஸ் கன்னா, சமீபத்தில் வாழைப்பழங்களின் ஆயுளை அதிகரிக்க மிகவும் எளிமையான ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு முன்னதாக, மற்றொரு சமையல் ஆர்வலர் மீண்டும் பழமையான பிரட்யை எவ்வாறு புதியதாக மாற்றுவது என்பதைக் காட்டினார்.
இப்படி நம்மை வியப்பூட்டும் இந்த ஹேக்குகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இதுவரை முயற்சித்தீர்களா மக்களே!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“