liquid dough chapati in tamil: சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு காரணமாக இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிடலாம். இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்கவும் இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி மிகவும் நல்லது.
Advertisment
சப்பாத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையில், வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 போன்றவை நிறைந்துள்ளன. அதோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் உள்ளது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.
இன்ஸ்டன்ட் சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப் மைதா மாவு - 1 கப் சர்க்கரை - 1 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
Advertisment
Advertisements
சப்பாத்தி செய்முறை:
மாவு பிசையாமல் இன்ஸ்டன்ட் சப்பாத்தி செய்ய முதலில் நீங்கள் ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கோதுமை மாவு, மைதா மாவு சேர்த்து கொள்ளவும். மைதா மாவு சேர்ப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அவற்றுக்கு பதிலாக கோதுமை மாவையே சேர்த்துக்கொள்ளலாம்.
இவற்றுடன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பிறகு அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கும் போது ஒரு கரண்டியால் மாவை மிக்ஸ் செய்து கொண்டே இருக்கவும்.
மாவு ரொம்பவும் தண்ணியாக இல்லாமலும், கெட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
மாவு கெட்டி படாமல் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு தோசை அல்லது தவா கல்லை மிதமான சூட்டில் வைத்து தோசை ஊற்றுவது போல் சிறிதாக ஊற்றிக்கொள்ளவும். தனலை லேசாக கூட்டி, கல்லில் உள்ள சப்பாத்தியில் எண்ணெய் சேர்த்து நன்கு அமுக்கி பிரட்டி எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சப்பாத்தி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil