Instant chutney recipes in tamil: கொத்தமல்லி அல்லது தனியா என்று அழைக்கப்படும் இந்த மூலிகை பொருள் இந்திய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் எந்த இந்திய சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நிச்சயமாக கூறலாம். ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ள இந்த கொத்தமல்லி ஒவ்வொரு உணவுக்கு சுவை கூட்டும். தவிர, இது மருத்துவ குணங்களால் நிரம்பியுள்ளது மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Advertisment
இந்த அற்புதமான மூலிகை இலையில் ஈஸியான மல்லி சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தக்களி மல்லி சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
பச்சை மிளகாய் - 5 தக்காளி - 3 சீரகம் - 1/2 ஸ்பூன் பூண்டு - 2 உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - 1 கப் கடுகு உலர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் எண்ணெய் புளி
தக்களி மல்லி சட்னி செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அவை சூடானதும் எண்ணெய் ஊற்றவும். பிறகு அவற்றில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறிய பிறகு நறுக்கிய தக்காளி, சீரகம், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கிய பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கவும்.
இவை ஓரளவுக்கு சூடு ஆறிய பிறகு மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு இவற்றுக்கு தாளிக்க, ஒரு சிறிய பாத்திரத்தில் நல்லெண்ணெய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு அவற்றில் பெருங்காய தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.
தொடர்ந்து இவற்றுடன் முன்னர் அரைத்துவைத்துள்ள கலவையை சேர்க்கவும்.
இப்போது நீங்கள் எதிர்ப்பார்த்த கொத்தமல்லி சட்னி தயாராக இருக்கும். இவற்றை சூடான இட்லி மற்றும் தோசைகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.