instant garlic chutney in tamil: தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த வகையான உணவுகளுக்கு ஒவ்வொரு வகையான சட்னிகள் பறிமாறப்படுகின்றன. இவை சுவையான சைடிஷ்களாக இருப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஒன்றாகவும் உள்ளது.
அந்த வகையில், பூண்டு சட்னி இட்லி, தோசைகளுக்கு பொருத்தமான சைடிஷ் ஆகும். பூண்டில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பூண்டின் அற்புத பயன்கள்
பூண்டு ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், இது எடை குறைக்கும் செயலுக்கும் உதவுகிறது. இவை ஆண்டிசயாடிக் மற்றும் அலிஜீன் போன்ற ஆண்டிபயாடிக் மற்றும் பூஞ்சை காளான் கலவைகளின் களஞ்சியமாகும். இது உங்களை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் பொதுவான சளி மற்றும் இருமலுக்கும் சிகிச்சையளிக்கிறது.

காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. பூண்டு உங்கள் செரிமான கோளாறுகளை தடுக்கவும், உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்கவும் உதவுகிறது.
பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், நீரிழிவு நோய், மன அழுத்தம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை அகற்ற இது உதவுகிறது.
பூண்டை பச்சையாக உட்கொள்வது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் இது நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

பூண்டு சட்னி எப்படி தயார் செய்வது?
இன்ஸ்டன்ட் பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
தண்ணீர் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பூண்டு தூள் – 1 தேக்கரண்டி
பூண்டு சட்னி சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு சிறிய கப்பில் தண்ணீர் எடுத்து அதில், பூண்டு தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான இன்ஸ்டன்ட் பூண்டு சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த இட்லி, தோசைகளுடன் சேர்த்து ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“