Advertisment

அவசர இட்லி… காலையில் 10 நிமிடத்தில் தயார் செய்ய இதுதான் வழி!

different types of idli recipes; from spicy idli to multigrain idli making in tamil: இந்த டேஸ்டி இட்லிகளில் ஓட்ஸ் இட்லி முதல் சிக்கன் இட்லி வரை பல வகைகள் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Instant idli recipes in tamil: try these 3 idli That cooked with in ten Minutes

Instant idli recipes in tamil: தென்னிந்திய சமையலில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக இட்லி உள்ளது. அதுவும் வெதுவெதுப்பான சாம்பாரில் ஊறவைத்து, நெய் தடவிய பஞ்சுபோன்ற இட்லிகளைப் போல சுவையானது எதுவும் இல்லை. சமைக்க எளிதான இந்த இட்லிகளை தேங்காய் மற்றும் காரமான சட்னிகளுடன் சேர்த்தும் ருசிக்கலாம்.

Advertisment

இந்த டேஸ்டி இட்லிகளில் ஓட்ஸ் இட்லி முதல் சிக்கன் இட்லி வரை பல வகைகள் உள்ளன. இப்படி ஏராளமான வகையுள்ள இந்த இட்லிகளை சமைக்க நேரம் எடுக்கும் என நினைக்க வேண்டாம். பத்தே நிமிடத்தில் ஈஸியான செய்முறை மூலம் அசத்தலாக செய்துவிடலாம். அப்படிப்பட்ட எளியமையான செய்முறைகளை இங்கு பார்க்கலாம்.

பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி

publive-image
பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி

ராகி மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். அவற்றை கொண்டு சுவையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லி உணவை தயார் செய்துவிடலாம்.

பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி செய்யத் தேவையான பொருட்கள்

1/2 கப் ராகி மாவு
1/2 கப் பஜ்ரா மாவு
1/2 கப் ஜோவர் மாவு
1/3 கப் முழு கோதுமை மாவு
உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி உப்பு
எண்ணெய்

பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி செய்வது எப்படி?

முதலில் உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தய விதைகளை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.

பிறகு மாவை ஒரு அகலாமான கிண்ணத்தில் மாற்றி, அதில் உப்பு சேர்த்து அனைத்து மாவுகளையும் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து நன்றாக கிளறவும். பின்னர் ஒரே இரவில் புளிக்க மூடி வைக்கவும்.

மாவு புளிக்கவைத்த பிறகு, மாவை மீண்டும் கலக்கவும்.

இப்போது இட்லி அச்சுகளில் முடிந்தவரை சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவிய இட்லி மாவு ஊற்றவும்.

அவற்றை சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதுபோல் செய்துகொள்ளவும்.

பிறகு சாம்பாருடன் சூடாக பரிமாறி ருசிக்கவும்.

publive-image
பலதானிய அல்லது மல்டிகிரேன் இட்லி

கார இட்லி

publive-image
கார இட்லி

நீங்கள் இட்லி மற்றும் மசாலாவை விரும்பி சாப்பிட்டால், நீங்கள் சாப்பிடுவதற்கு இது சரியான செய்முறையாகும். இந்த செய்முறையை நீங்கள் சமைக்க ஐந்து நிமிடங்கள் போதும். இந்த கார இட்லி சுவைகள் நிறைந்தது. இவற்றுக்கென சட்னி மற்றும் குழம்பு செய்ய வேண்டிய அவசியமில்லை.

கார இட்லி சிம்பிள் செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, சிறிது கறிவேப்பிலை மற்றும் கடுகு சேர்க்கவும். அவை வெடிக்கும் வரை வதக்கவும். பிறகு சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து, ஒரு முறை கிளறி, வேகவைத்த இட்லியை அதில் சேர்த்து தாளிக்கவும். இப்போது சூடான மற்றும் காரமான இட்லி தயாராக இருக்கும்.

இட்லி உப்மா

publive-image
இட்லி உப்மா

இட்லி உப்மா நம்மில் பலர் அறிந்த ஒன்று தான். அதுவும் 90's கிட்ஸ் அனைவருக்கும் நன்றாக தெரிந்துதான். தவிர சூரியவம்சம் படம் பார்த்தவர்கள் நிச்சயம் இவற்றை முயற்சித்திருப்பார்கள்.

இந்த இட்லி உப்மா தயார் செய்ய, முதலில் இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் வேண்டும் என்றாலும் சேர்த்து கொள்ளலாம்.

இவையனைத்தையும் நன்றாக வதக்கி பின்னர், முன்னர் உதிர்த்த இட்லிகளை இவற்றுன் சேர்த்து கிளறிக் கொண்டால், சுவையான இட்லி உப்மா தயார்.

இந்த இட்லி வகைகளை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாம் மக்களே!!!

publive-image
இட்லி உப்மா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Tamil Food Recipe Idli Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment