சமீப நாட்களாக இண்டர்மிடண்ட் ஃபாஸ்டிங் முறையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சாப்பிட்டு மற்ற நேரத்தில் உணவருந்தாமல் இருப்பதையே இண்டர்மிடண்ட் ஃபாஸ்டிங் எனக் கூறுகின்றனர். அந்த வகையில், அன்றைய நாளின் கடைசி உணவை மாலை 5:30 மணிக்கு முடித்துவிட்டு அடுத்த நாள் உணவை காலை 10 மணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் உணவருந்தாமல் இருக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Why fasting between 5.30 pm and 10 am works best to melt belly fat, control blood sugar
நேச்சரில் வெளியிடப்பட்ட ஸ்பானிஷ் ஆய்வில் இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் நான்கு விதமான உண்ணாவிரத முறையை பின்பற்றியுள்ளனர். இதில் மாலை 5:30 மணிக்கு அன்றைய உணவை சாப்பிட்டு விடுபவர்களுக்கு தொப்பை அதிகளவில் குறைவது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் சீராக இருந்துள்ளது.
"குறிப்பிட்ட எட்டு மணி நேர உணவு முறையை தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சரிசெய்யலாம். ஏனெனில் இவர்கள் சாப்பிடுவதற்கு காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை நேரம் இருக்கிறது" என சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் பர்ஜீத் கவுரின் தெரிவித்துள்ளார்.
இரத்த சர்க்கரை மற்றும் வயிற்று கொழுப்பைக் குறைப்பதில் 16:8 வழக்கமானது ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது?
இந்த முறை கொழுப்பை குறைக்க மற்றும் குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்வதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். உண்ணாவிரதத்தின் போது, உடல் இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது உண்ணும் நேரத்தின் போது, இன்சுலினை திறம்பட பயன்படுத்தும் திறனை மேம்படுத்துகிறது. மேலும், இரத்த சர்க்கரையை சிறப்பாக ஒழுங்குபடுத்துகிறது. இது எடை மேலாண்மைக்கு பங்களிக்கும்.
விரதம் இருக்கும் நேரம் முக்கியமா?
சாப்பிடும் நேரம் மிகவும் முக்கியமானது. கட்டுப்படுத்தப்பட்ட உணவு, மாற்ற ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குவதாக அறிவுறுத்தப்படுகிறது. இது வயது மூப்பு அடைவதை கூட கட்டுப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வயிற்று கொழுப்பின் அளவை விரதம் எவ்வாறு குறைக்கிறது?
உங்களுடைய உண்ணும் நேரத்தை எட்டு மணி நேரத்திற்குள் கட்டுப்படுத்துவதன் மூலம், நீங்கள் குறைவான கலோரிகளை உட்கொள்கிறீர்கள். இன்சுலின் அளவு குறையும்போது, உடல் ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட கொழுப்பைத் தேடுகிறது. வயிற்றைச் சுற்றியுள்ள உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்கிறது.
நேரம் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறைகள் குறித்து ஏன் அதிக ஆராய்ச்சி தேவை?
மற்ற எடை குறைப்பு முறைகளுடன் ஒப்பிடும்போது நேரம் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை குறுகிய கால பலன்களை உறுதியளிக்கிறது. எனினும், நீண்ட காலத்திற்கு இந்த நன்மைகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை. மேற்கத்திய மக்கள்தொகையில் முதன்மையாகக் காணப்பட்ட கண்டுபிடிப்புகளை சரிபார்க்க பெரிய, நீண்ட கால ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
- அன்கிதா உபதாய்