சர்வதேச யோகா வாரம் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கிறது. மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை பார்க்கும் இன்றைய இளைய சமூகத்துக்கும், கூட்டு குடும்ப சூழல் அற்று, தனிக்குடித்தனம் என்று வாழப் பழகி ஊறிப் போயிருக்கும் தலைமுறைக்கும் அவசியம் தேவைப்படும் ஒன்று யோகா.
அதன் ஒரு பகுதியாக, எந்த ஆசனத்தை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சர்வாங்காசனம்
ரத்த மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு இந்த ஆசனம் பலம் தரும். இந்த ஆசனம் செய்யும்போது தொண்டைக்கு அதிக ரத்த ஓட்டத்தை அளித்து தைராய்டு பிரச்சினைகளை சரி செய்யும். காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சினை களுக்கும் நிவாரணம் தரும். முடி உதிர்வை குறைக்கும்.
செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் - ஆய்வு ரிப்போர்ட்
சவாசனம்
எந்த ஆசனம் செய்தாலும் இறுதியில் சவாசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நாம் பயிற்சி செய்யும்போது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உடலை ஓய்வு நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்காக கண்டிப்பாக இறுதியில் இந்த ஆசனம் செய்ய வேண்டும்.
விராபத்ராசனா
மலையின் போஸிலிருந்து, எடையை வலது காலுக்கு மாற்றவும், இடுப்பின் நேரான நிலையை பராமரிக்கும் போது இடதுபுறத்தை முடிந்தவரை பின்னால் எடுத்துச் செல்லவும். உடலின் எடையை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள், இடது காலை உங்களுக்கு பின்னால் இழுத்துச் செல்லுங்கள், இதனால் உடலும் காலும் தரையில் இணையாக ஒரு நேர் கோட்டை உருவாக்குகின்றன. இது கடினமாக இருந்தால், சமநிலையை வைத்திருக்க உங்கள் விரல் நுனியை தரையில் குறைக்கவும்.
திரிகோனாசனா
முக்கோணத்தின் போஸ் முதுகு, கைகள் மற்றும் கால்களின் தசைகளை பலப்படுத்துகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. குடலை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல்களை நீக்குகிறது.
சக்ராசனம்
இதயத்திற்கு சிறந்த ஆசனம் இது. ஆஸ்துமா உள்ளோருக்கும் பலனளிக்கும். தைராய்டு மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளை துரிதப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். உடல் ஆற்றலை மேம்படுத்தும்.
ஆரோக்கியம் : பாரம்பரிய அரிசியில் ‘ட்ரெண்டி’ உணவுகளை பரிமாறும் ‘மண்வாசனை மேனகா’