விமான பயணத்திற்கு இலவச இன்சூரன்ஸ் வேண்டுமா? IRCTCக்கு வாங்க…ஜமாய்ங்க..

IRCTC Travel Insurance: : IRCTC Air இணையதளம் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயண டிக்கெட் புக்கிங் செய்யும் அனைவருக்கும் இந்த திட்டம்

irctc, irctc flight booking
IRCTC, IRCTC travel insurance, IRCTC chart vacancy, indigo flight booking, IRCTC cancellation rules, IRCTC flight ticket booking, IRCTC train ticket booking, IRCTC Tejas, IRCTC PNR linking, IRCTC flight insurance, விமான பயணம், டிராவல் இன்சூரன்ஸ், ரயில் பயணம், ஐஆர்சிடிசி

IRCTC Flight Insurance: புத்தாண்டில் விமான பயணம் மேற்கொள்ள திட்டமா? உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

IRCTC அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதன் மொபைல் அப்ளிகேசன் மூலம், விமான டிக்கெட்டை புக் செய்பவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயண இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுவதாக IRCTC தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. IRCTC நிறுவனம், பார்தி ஆக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த இலவச இன்சூரன்சை வழங்க உள்ளது.

IRCTC Air இணையதளம் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயண டிக்கெட் புக்கிங் செய்யும் அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்ல டிரெய்ன் டிக்கெட் பண்ணுங்க, அப்புறம் காசு கொடுக்கலாம் – ஐஆர்சிடிசி-யின் புதிய சேவை

விமான பயணத்தின் போது ஏற்படும் விபத்தின் காரணமாக நிகழும் மரணம், முழுவதும் செயல்படமுடியாத நிலை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இந்த இலவச இன்சூரன்ஸ் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவழி பயணம் மற்றும் இரண்டு வழிப்பயணம் மேற்கொள்வோரும் இந்த திட்டத்தில் இணையலாம்.

விபத்து இன்சூரன்சை தவிர்த்து, IRCTC, பயணத்தின்போது உடைமைகள் தொலையும் பட்சத்தில் உள்நாட்டு பயணம் எனில் ரூ.3 ஆயிரமும், வெளிநாட்டு பயணம் எனில் 250 அமெரிக்க டாலர்கள் அளவிற்கும் இழப்பீடு வழங்கிவருகிறது.

மற்ற விமான டிக்கெட் புக்கிங் போர்டல்களான மேக் மை டிரிப், யாத்ரா, கிளியர்டிரிப் உள்ளிட்ட இணையதளங்கள், டிராவல் இன்சூரன்ஸ்க்காக ரூ.200 முதல் 250 வரை வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.IRCTC போர்டல், தங்களது வாடிக்கையாளர்களின் வசதிக்காக, இலவச டிராவல் இன்சூரன்ஸ் சேவையை வழங்கி வருவதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC போர்டல், ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு 49 பைசா செலவில் ரூ.10 லட்சம் வரையிலான விபத்துக்காப்பீடை வழங்கி வருது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc irctc air ticket booking free travel insurance train ticket irctc app

Next Story
’வறுமை தான் என்னோட வில்லி’: சீரியல் வில்லி சாந்தி வில்லியம்ஸின் கண்ணீர் கதைShanthi Williams, pandian stores
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com